அருப்புக்கோட்டையில் அதிசய சித்தர்கள்
அருப்புக்கோட்டையில் அதிசய சித்தர்கள், எஸ். ஆர். விவேகானந்தம், கே.கே. முனியராஜ், வந்தவாசி, விலை 60ரூ.
இறைநிலைக்குச் சென்ற மனிதர்கள் மனத்தின் போக்கில் சென்று அதன் பயணத்தை முழுமையாக உணர்ந்து, நல்லது கெட்டது அறிந்து, வாழ்வென்னும் நிலையாமையைப் புரிந்துகொண்டவர்கள் சித்தர்கள். சித்தர்களின் அற்புதங்கள் கேட்க கேட்கத் திகட்டாதவை. ஆனால் அவை மட்டுமே அவர்களின் நோக்கமல்ல. மனிதனாகப் பிறந்தவர்கள் இறைநிலையை அடையும் வழிமுறைகளை அனுபவத்தில் கண்டறிந்து அவற்றையும் சித்தர்கள் சொல்லிச் சென்றுள்ளார்கள். அப்படியானவர்களில் பலர் அறியப்பட்டுள்ளனர். சிலர் அறியப்படவேயில்லை. ஆகவே, அருப்புக்கோட்டைப் பகுதியின் அறியப்படாத சித்தர்களை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அருப்புக்கோட்டையில் அதிசய சித்தர்கள் என்னும் நூலைப் படைத்துள்ளனர் எஸ்.ஆர். விவேகானந்தமும், கே.கே. முனியராஜும். விஷஜந்துக்களிடம் பிரியம் காட்டிய ஸ்ரீ உஜ்ஜி சுவாமிகள் என்னும் சதிதர், வீரபத்திர சுவாமிகள், ஸ்ரீ சுப்பா ஞானியர் சுவாமிகள் உள்ளிட்ட 15 சித்தர்கள் பற்றிய குறிப்புகள் இந்நூலில் உள்ளன. இந்தச் சித்தர்களை அறிமுகப்படுத்துவதுடன் இவர்களின் சமாதி எங்கு அமைந்துள்ளது என்னும் விவரத்தையும் இந்நூல் தெரிவிக்கிறது. சித்தர்களின் சமாதிகளைத் தரிசிக்க விரும்புவர்களுக்கு இந்தத் தகவல்கள் மிகவும் உபயோகமானவையாக இருக்கக்கூடும். நன்றி:தி இந்து, 13/9/2014.