மறவர் சீமை ஒரு பாதிரியாரின் பார்வையில்

மறவர் சீமை ஒரு பாதிரியாரின் பார்வையில், தமிழில் மு.பாலகிருஷ்ணன், எஸ்.ஆர்.விவேகானந்தம், அகநி வெளியீடு, பக். 192, விலை 150ரூ. மருது பாண்டியர் குறித்து, ரெவரன்ட் பாதர் பாச்சி எழுதியுள்ள, மருதுபாண்டியன் தி பேட்புல் எய்ட்டீன்த் செஞ்சுரி எனும் இந்த நூல், குறிப்பிடத்தக்கது. 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தமிழகத்தில் சமயப்பணி ஆற்றிய, கத்தோலிக்க பிரெஞ்சுப் பாதிரியாரான பாச்சி, ராமநாதபுரம் மற்றம் சிவகங்கை ஆட்சியாளர்களிடம் பழகியுள்ளார். அரசு நடவடிக்கைகள், ஆங்கிலேயர்களின் அதிகார குறுக்கீடுகள், பாளையக்காரர்களின் கிளர்ச்சிகள் என பலவற்றை, தன் குறிப்பேடுகளில் பதிவு செய்துள்ளார். குறிப்பாக, மருது […]

Read more

அருப்புக்கோட்டையில் அதிசய சித்தர்கள்

அருப்புக்கோட்டையில் அதிசய சித்தர்கள், எஸ். ஆர். விவேகானந்தம், கே.கே. முனியராஜ், வந்தவாசி, விலை 60ரூ. இறைநிலைக்குச் சென்ற மனிதர்கள் மனத்தின் போக்கில் சென்று அதன் பயணத்தை முழுமையாக உணர்ந்து, நல்லது கெட்டது அறிந்து, வாழ்வென்னும் நிலையாமையைப் புரிந்துகொண்டவர்கள் சித்தர்கள். சித்தர்களின் அற்புதங்கள் கேட்க கேட்கத் திகட்டாதவை. ஆனால் அவை மட்டுமே அவர்களின் நோக்கமல்ல. மனிதனாகப் பிறந்தவர்கள் இறைநிலையை அடையும் வழிமுறைகளை அனுபவத்தில் கண்டறிந்து அவற்றையும் சித்தர்கள் சொல்லிச் சென்றுள்ளார்கள். அப்படியானவர்களில் பலர் அறியப்பட்டுள்ளனர். சிலர் அறியப்படவேயில்லை. ஆகவே, அருப்புக்கோட்டைப் பகுதியின் அறியப்படாத சித்தர்களை அறிமுகப்படுத்துவதை […]

Read more