பயத்திலிருந்து விடுதலை

பயத்திலிருந்து விடுதலை, ஜே.கிருஷ்ணமூர்த்தி, தமிழில் எஸ். ராஜேஸ்வரி, நர்மதா பதிப்பகம், சென்னை, பக். 208, விலை 120ரூ. தத்துவஞானி ஜே. கிருஷ்ணமூர்த்தி பயம் குறித்தும் அதனை எதிர்கொள்ள வேண்டிய விதம் குறித்தும் பல இடங்களில் பேசியதிலிருந்தும், எழுதியதிலிருந்தும் தொகுக்கப்பட்ட கட்டுரைகள் அடங்கிய நூல். நம் எல்லோருக்குமே பயம் உள்ளது. வேலை போய்விடுமோ என்ற பயம், பணம் இல்லாமல் போய்விடுமோ என்ற பயம், மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற பயம், வெற்றி பெற மாட்டோமோ என்கிற பயம், நோய்கள் குறித்த பயம், மரணம் […]

Read more

அருப்புக்கோட்டையில் அதிசய சித்தர்கள்

அருப்புக்கோட்டையில் அதிசய சித்தர்கள், எஸ். ஆர். விவேகானந்தம், கே.கே. முனியராஜ், வந்தவாசி, விலை 60ரூ. இறைநிலைக்குச் சென்ற மனிதர்கள் மனத்தின் போக்கில் சென்று அதன் பயணத்தை முழுமையாக உணர்ந்து, நல்லது கெட்டது அறிந்து, வாழ்வென்னும் நிலையாமையைப் புரிந்துகொண்டவர்கள் சித்தர்கள். சித்தர்களின் அற்புதங்கள் கேட்க கேட்கத் திகட்டாதவை. ஆனால் அவை மட்டுமே அவர்களின் நோக்கமல்ல. மனிதனாகப் பிறந்தவர்கள் இறைநிலையை அடையும் வழிமுறைகளை அனுபவத்தில் கண்டறிந்து அவற்றையும் சித்தர்கள் சொல்லிச் சென்றுள்ளார்கள். அப்படியானவர்களில் பலர் அறியப்பட்டுள்ளனர். சிலர் அறியப்படவேயில்லை. ஆகவே, அருப்புக்கோட்டைப் பகுதியின் அறியப்படாத சித்தர்களை அறிமுகப்படுத்துவதை […]

Read more