அல்லல் போக்கும் ஆணைமுகன் தலங்கள்
அல்லல் போக்கும் ஆணைமுகன் தலங்கள் (நூலாசிரியர்: கே.சாய்க்குமார், வெளியீடு: 16, 28, 2 வது மெயின் ரோடு , சாய் நகர், அரும்பாக்கம், சென்னை – 600 106., பக்கம்: 160, விலை: ரூ.90.)
பிறமாநிலங்களில் உள்ள, 200 விநாயகர் தலங்களின் பூரண வழிகாட்டி நூல். பிணைப்பில் வரைப்படம் – அகர வரிசையில் தல விவரம் உள்ளது. திருகோவிலின் பூஜை நேரம் வழிதடம்,தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் என, நலல பயனுள்ள செய்திகள் உள்ளடக்கிய பயண நூல். நன்றி: தினமலர் (10-3-2013).
—
மாடுகளைத் தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும் (நூலாசிரியர் டாக்டர். வி. புருஷோத்தமன், வெளியீடு: கண்ணப்பன் பதிப்பகம், சென்னை – 600 016, விலை: ரூ.60)
பசு மற்றும் காளை மாடுகள் வளர்ப்போர் படிக்க வேண்டிய தகவல்கள் சிறப்பாக தரப்பட்டிருக்கின்றன. நன்றி: தினமலர் (10-3-2013).
—
சுப்பிரமணியசிவா சிறைவாசம் (நூலாசிரியர்: செ.திவான், வெளியீடு: ரெஹாஜ் பதிப்பகம், பாளையங்கோட்டை – 627 992. விலை: ரூ.50)
வ.உ.சி.யுடன் இணைந்து சிறை சென்றவரும், ஆங்கிலேய ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்து போராடியவருமான சுப்பிரமணிய சிவா பெருமைகளை, இளைஞர்கள் அறிய உதவும் நூல். திருச்சி சிறையில், கேழ்வரகை அரைக்கும் வேலையில் ஈடுபடுத்தியது, பின் பஞ்சை பதப்படுத்தும் பணியில், ஈடுபட்ட நெஞ்சக நோய் ஏற்பட்ட அவலம் ஆகியவை சுதந்திர வேள்விக்காக, அவர் பட்ட துயரங்களின் சாட்சியாகும். தன், 41 வது வயதில், அவர் மறைந்தது வரை நடந்த வரலாற்று தடயங்கள் சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன. நன்றி: தினமலர் (10-3-2013).