இயேசு இந்தியாவில் வாழ்ந்தார்
இயேசு இந்தியாவில் வாழ்ந்தார், ஹோல்கல் கெர்ஸ்டன், தமிழில் – உதயகுமார், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 200ரூ.
இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பும் பின்பும் அவரது வாழ்வில் நடந்த அறியப்படாத நிகழ்வுகளின் பதிவு இந்நூல். மத சரித்திர நூல்களை எழுதுவதில் நிபுரணரான ஹோல்கர் கெர்ஸ்டன், இயேசு இந்தியாவுக்கு வந்ததையும், வாழ்ந்ததையும், மறைந்ததையும் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். அதற்கான ஆதாரங்களையும் தந்திருக்கிறார். அவை இயேசு பற்றிய ஆய்வுக்குப் பயனுள்ள ஆதாரங்களாக விளக்குகின்றன. இயேசு இளம் வயதில் பட்டு வியாபார பாதை (Silk Route) வழியாக இந்தியாவுக்கு வந்து, இந்து மதத்தையும் புத்தமதத்தையும் ஆழ்ந்தறிந்தார் என்கிறார் இந்நூலாசிரியர். இந்து, புத்த மத சிறப்பியல்புகளை உள்வாங்கியதால்தான் அவரால் ஆன்மிக குருவாக உருமாற முடிந்தது என்றும் நிறுவுகிறார். சிலுவையில் அறையப்பட்ட இயேசு, மீண்டு, இந்தியா வயது வயதான காலம் வரை வாழ்ந்து இந்தியாவிலேயே அமரரானார் என்பதற்கு, காஷ்மீர் ஸ்ரீநகரில் இன்றும் உள்ள அவரது கல்லறையை ஆதாரமாகக் காட்டுகிறார். இந்து வாசகர்களுக்கு இயேசு இந்தியாவில் வாழ்ந்தார் என்பது ஆச்சரியப்படவைக்கும் ஒன்றாகும். இதுவரை 37 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நூல், இப்போது தமிழில் முதன்முதலாக வந்துள்ளது. ஆய்வுக்குரிய நூல். நன்றி: குமுதம், 22/12/2014.
—-
விவசாய விஞ்ஞானி ஜகதீஸ் சந்திரபோஸ், மெர்வின், சுவாமிமலை பதிப்பகம், சென்னை, விலை 50ரூ.
செடிகளுக்கு உயிர் இருக்கிறது என்ற உண்மையை உலகிற்கு எடுத்துக்காட்டியவர் விஞ்ஞானி ஜகதீஸ் சந்திரபோஸ். உலக விஞ்ஞானிகளே ஆச்சரியப்பட்ட இவருடைய கண்டுபிடிப்புகள் மற்றும் இவருடைய வாழ்க்கை வரலாற்றை பற்றி கூறும் வரலாற்று நூல். நன்றி: தினத்தந்தி, 17/12/2014.