இராமனும் இராமசாமியும்
இராமனும் இராமசாமியும், ம. பிரகாஷ், காவ்யா, பக். 192, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-313-6.html
ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போன்று, எந்த விவாதத்திற்கும் இரண்டு விதமான விளக்கங்கள் உண்டு என்பர். இந்நூலில் ராமரின் அவதாரம் குறித்து, ஈ.வெ.ரா., எடுத்துக்கொண்ட ராமாயண எதிர்ப்புப் போர் குறித்து, மிக விரிவாக ஆய்வு செய்யப்படுவதை காண்கிறோம். இந்நூலில் மூன்று பிரிவுகளில் ராமாயணம் குறித்த ஆய்வுகள் நூலாசிரியர் செய்துள்ளார். அதில் பெரியாருக்கு முன் ராமாயணமும் தமிழ் சமூகமும் என்ற பிரவு, நூலாசிரியரின் கடும் உழைப்பையும், ஆய்வுத் திறனையும் தெரிவிக்கின்றது. இரண்டு மற்றும் மூன்றாம் பிரிவுகளை அவரது பேச்சுக்கள் மூலம் விளக்குகிறார். ஈ.வெ.ராவின் பல கொள்கைகளை ஏற்றுக் கொண்ட தமிழ் மக்கள், ராமாயணம் குறித்த அவரது வாதங்களைப் புறக்கணித்துவிட்டனர் என்பது தான் உண்மை. இந்நூல் படித்து முடித்ததும் நமக்கு ஏற்படும் எண்ணங்கள் இரண்டு. ஒன்று செத்த பாம்பை மீண்டும் அடிப்பது வீரமா? இரண்டாவது பழங் குப்பைகளைக் கிளறுவது ஆய்வா? பகுத்தறிவு பண்பாட்டை வளர்க்க வேண்டும். சிதைக்கக் கூடாது என்பதை நடுநிலையாளர்கள் நிச்சயம் ஏற்பர். -டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி: தினமலர், 20/10/2013.
—-
முதுமையே வா வா வா, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 130ரூ. To buy this tamil book online – www.nhm.in/shop/100-00-0001-728-2.html
முதியவர்களுக்கு வரும் நோய்கள், அவற்றுக்குச் செய்ய வேண்டிய தற்காப்பு முறைகள், பரிசோதனைகள், கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறைகள், உட்கொள் ளவேண்டிய மருந்துகள் என்று முதியோர் மருத்துவம் சார்ந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வழிவகை சொல்கிறது இந்த நூல். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பலதரப்பட்ட முதியவர்களின் பல்வேறு தொல்லைகளைக் கேட்டும், அவர்களைப் பரிசோதித்தும், தக்க சிகிச்சைகள் அளித்தும் தான் பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொள்வதோடு, முதுமையை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட்டால், சந்தோஷமாக வாழலாம். முதுமையும் ஒரு சுகமே என்பதையும், மிகவும் இயல்பாக எளிமையாக எல்லோருக்கும் புரியும்படி அரிய பயன்களை அள்ளித் தருகிறார் டாக்டர் வி.எஸ். நடராஜன். நன்றி: தினத்தந்தி, அக்டோபர் 2013.