என் இனிய இந்து மதம்
என் இனிய இந்து மதம், திருமகள் நிலையம், சென்னை, விலை 45ரூ.
இந்து மதத்தின் பெருமைகளையும், மேன்மைகளையும் விளக்கிக்கூறும் நூல். மார்கழியின் மகத்துவம். தை மாதத்தில் திருமணம் செய்தால் ஐப்பசியில் குழந்தையோடு தலைத் தீபாவளி கொண்டாடலாம். சிவராத்திரியின் சிறப்பு, ஜாதகம் பார்ப்பது ஏன்? கடவுளுக்கு எதற்கு கல்யாணம்? முடியைக் காணிக்கையாக செலுத்துவது ஏன் என்பன போன்ற இந்துக்களின் சடங்குகள், சம்பிரதாயங்களில் ஒளிந்திருக்கும் ஆழ்ந்த நுட்பமான பொருளை எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் அழகுபட விவரித்துள்ளார். அதுவே மனிதன் மகிழ்வோடு வாழ்ந்திட ஆதாரமாக இருக்கிறது என்பதை ஆதாரத்துடன் விளக்கி இருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 16/7/2014.
—-
நீதி நூல்கள்(தரும தீபிகை), தமிழ் நிலையம், சென்னை, 17, தொகுதி – 8, பக். 2952, விலை 1880ரூ.
தாங்கள் சலுகை விலையான ரூ. 940 மட்டும் தபால்காரரிடம் செலுத்தி நூல்களைப் பெற்றுக்கொள்ளலாம். திருக்குறள் போலச் சிறந்த நூல்கள் இவை. பொருளடக்கம் வருமாறு-மனிதனிலை, உடல்நிலை, பசி, பழக்கம், பெற்றோரைப் பேணல், மனைமாட்சி, மக்கட்பேறு, அழகு, குணம், இனநலம், மனநலம், வாக்குநயம், போலிநிலை, பொய், குறளை, கொடுஞ்சொல், குறும்பு, தாய்மொழி, தமிழ், நூல், கவி, கவிஞர், புலவர் நிலை, கருமநலன், வாழ்க்கை நிலை, கடன், இரப்பு, தன்னம்பிக்கை, ஆண்மை, மேன்மை, சீர்மை, சீலம், நீர்மை, நெறி, நேர்மை, தூய்மை, நேயம், நினைவு, நிலை, நியமம், அமைதி, கருணை, காட்சி, வாழ்நாள், நசை, வறுமையின் பெருமை, தொழில், சோம்பல், மறதி, உறுதி, இதம், மதம், நாகரிகம், பண்பு, விநயம், கல்வி, செல்வம், பதவி, கல்விச் செருக்கு, செல்வத்திமிர், கள்ளின் களிப்பு, புன்மை, பொறாமை, கோபம், காமம், கரவு, கொடுமை, உலோபம், தீமை, புலை, கொலை, பழி, பாவம், புகழ், புண்ணியம், அரசு, அறிவு, ஆற்றல், ஆட்சி, மாட்சி, வீரம், கொடை, நிதி, யூகம், யூகி, தகவு, தரம், உரம், வரம், விதி, பிறப்பு, இறப்பு, இருப்பு, சிறப்பு, ஞானம், துறவு, தவம், தனிமை, இனிமை, வீடு ஆகிய தலைப்புகளில் 2952 பக்கங்களாகும் எட்டுத் தொகுதிகளும். இவை திருக்குறளுக்கு இணையானவை என்பதனை மீண்டும் நினைவுப்படுத்துகிறோம். நன்றி: தினமணி கதிர், 20/7/2014.