என் இனிய இந்து மதம்

என் இனிய இந்து மதம், திருமகள் நிலையம், சென்னை, விலை 45ரூ. இந்து மதத்தின் பெருமைகளையும், மேன்மைகளையும் விளக்கிக்கூறும் நூல். மார்கழியின் மகத்துவம். தை மாதத்தில் திருமணம் செய்தால் ஐப்பசியில் குழந்தையோடு தலைத் தீபாவளி கொண்டாடலாம். சிவராத்திரியின் சிறப்பு, ஜாதகம் பார்ப்பது ஏன்? கடவுளுக்கு எதற்கு கல்யாணம்? முடியைக் காணிக்கையாக செலுத்துவது ஏன் என்பன போன்ற இந்துக்களின் சடங்குகள், சம்பிரதாயங்களில் ஒளிந்திருக்கும் ஆழ்ந்த நுட்பமான பொருளை எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் அழகுபட விவரித்துள்ளார். அதுவே மனிதன் மகிழ்வோடு வாழ்ந்திட ஆதாரமாக இருக்கிறது என்பதை ஆதாரத்துடன் […]

Read more

இறுதிச் சொற்பொழிவு

இறுதிச் சொற்பொழிவு, மஞ்சுள் பப்ளிக் ஹவுஸ், 7/32, அன்சாரி ரோடு, தர்யாகஞ்ச், புதுடெல்லி 110002, விலை 199ரூ. அமெரிக்காவின் கார்னகி மெலன் பல்கலைக்கழக கணினி துறை பேராசிரியர் ரேண்டி பாஷ் அழகான மனைவி, 3 இளம் குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் அவருக்கு குணப்படுத்த முடியாத புற்றுநோய் இருப்பது திடீரென தெரியவருகிறது. வாழ்வின் கடைசி கட்டத்தில் இருந்தாலும் ரேண்டிபாஷ் துவண்டுவிட வில்லை. தன் மனைவி குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் இருந்து செய்யக்கூடியவற்றை குறைந்த நாட்களிலேயே செய்ய முனைகிறார். இதற்கிடையே பல்கலைக்கழகத்தில் இறுதிச் சொற்பொழிவு ஆற்ற அவருக்கு […]

Read more