ஐயம் அகற்று
ஐயம் அகற்று, கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை 17 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-143-3.html
கண்ணதாசன் கேள்வி – பதில், கவிஞர் கண்ணதாசன் தென்றல் பத்திரிகை நடத்திய காலகட்டத்தில் ஐயம் அகற்று என்ற தலைப்பில் கேள்வி பதில் பகுதியை எழுதினார். அவற்றை தொகுத்து ஐயம் அகற்று என்ற பெயரில் இப்போது புத்தகமாக கண்ணதாசன் பதிப்பகம் வெளிவந்துள்ளது. காரசாரமான பதில்கள், நகைச்சுவையான பதில்கள், இலக்கியச்சுவையான பதில்கள்… இப்படி பலவிதமான பதில்களை கவிஞர் அளித்துள்ளார். படித்து ரசிக்க வேண்டியவை. சிரமப்பட்டு இதைத் தொகுத்துள்ள ஆர்.பி. சங்கரன் பாராட்டுக்கு உரியவர். இந்த புத்தகத்தின் விலை 40ரூ. கண்ணதாசனின் இலங்கைப் பயணம் பற்றிய நூலையும் கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விலை 70ரூ. கண்ணதாசனின் புகழ் பெற்ற நூலான ஞானமாலிகாவும் இப்போது புது வடிவம் பெற்றுள்ளது. விலை 80ரூ.
—-
சத்ரபதி வீரசிவாஜி, அங்கமுத்து, சங்கர் பதிப்பகம், 21, டீச்சர்ஸ் கில்டு காலனி, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 85ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-481-3.html
இந்து சாம்ராஜ்யம் உருவாக உழைத்த மராட்டிய மாவீரன் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாறு. சிவாஜியின் வாழ்வில் நடந்த வீரதீர நிகழ்ச்சிகளில் முக்கியமானவை இடம் பெற்றுள்ளன.
—-
புயலுக்குப் பின்னே பூந்தென்றல், சுப. உதயகுமார், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, விலை 75ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-161-3.html
கூடங்குளம் போராட்ட ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரின் இளமைக்கால அனுபவங்களை கூறுகிறது இந்நூல். அவர் எத்தியோப்பியாவில் இருந்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் அவரை ஓர் ஆளுமையாக மாற்றும் வல்லமை கொண்டவராக அமைந்ததை இந்த நூலில் பார்க்க முடிகிறது. அவருடைய வாழ்க்கையில் எதிர்கொண்ட பிரச்னைகளை கையாண்ட அனுபவங்களும் முன் வைக்கப்பட்டுள்ளது. நன்றி; தினத்தந்தி, 14/8/2013