ஓய்வுக்குப்பிறகும் உற்சாக வாழ்க்கை

ஓய்வுக்குப்பிறகும் உற்சாக வாழ்க்கை, மன்னார்குடி பானுகுமார், விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை 641001, பக். 272, விலை 155ரூ.

பணி ஓய்வு பெற்றவர்கள் மட்டுமின்றி 60 வயதை எட்டிய அனைவருமே ஓய்வு பெற்றவர்களே. இவர்களில் பலர் தங்களது சுறுசுறுப்பான வாழ்க்கையும், சம்பாத்தியமும் நம்மைக் கடந்துவிட்டது. இனி பிறர் தயவில்தான் வாழ வேண்டும் என்ற தாழ்வு மனப்பான்மையால் உந்தப்பட்டு விரக்தி அடைகிறார்கள். அந்த விரக்தியிலிருந்து விடுபட்டு முதியவர்கள் உற்சாகத்துடன் வாழவும், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகள் தங்களை அணுகாமல் இருக்க இளைஞர்கள் எச்சரிக்கையுடன் வாழவும் இந்நூல் சிறந்த வழிகாட்டியாக உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஓய்வு காலம் என்றால் என்ன என்பதில் தொடங்கி, ஓய்வு காலத்திற்கு எப்படித் தயாராவது, பாதுகாப்பான வாழ்க்கைக்கு எப்படித் திட்டமிடுவது, பாதுகாப்பான முதலீடுகள் உயில் பற்றிய சில குறிப்புகள், வாழ்க்கைத் துணைக்கும், வாரிசுகளுக்கும் செய்ய வேண்டியவை, ஓய்வு காலத்திலும் என்னென்ன சாதனைகள் புரியலாம். மறதியைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும், கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறைகள், ஓய்வு காலத்தில் வரக்கூடிய நோய்கள், அதற்குரிய பரிகாரங்கள், தியானம் மற்றும் உடற்பயிற்சியின் அவசியம், மனதை எப்போதும் அமைதியாகவும், சந்தோஷமாகவும், உற்சாகமாகவும் வைத்திருக்கத் தேவையான நூறு டிப்ஸ்கள் வரை, சுமார் நூறு கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இடையிடையே தன்னம்பிக்கையூட்ட பிரபலஸ்தர்கள் சிலரது வாழ்க்கை அனுபவங்கள், புள்ளி விவரங்கள் என்று பல அரிய தகவல்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இது ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்கும் உபயோகமான நூல். -பரக்கத். நன்றி: துக்ளக், 13/11/13.  

—-

 

அழியாத கோலங்கள், சு. குப்புசாமி, வசந்தா பிரசுரம், 15, ஜெய்சங்கர் தெரு, மேற்குமாம்பலம், சென்னை 33, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-653-1.html

சஸ்பென்ஸ், திருப்பம், காதல் நிறைந்த நாடகம். நன்றி: தினத்தந்தி, 21/11/12.

Leave a Reply

Your email address will not be published.