கவிஞர் வாணிதாசனின் புலமை
கவிஞர் வாணிதாசனின் புலமை, தமிழ் ஐயா வெளியீட்டகம், தஞ்சாவூர் மாவட்டம், விலை 500ரூ.
திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம் சார்பில் கவிதைத் தமிழ் 12வது ஆய்வு மாநாடும், கவிஞர் வாணிதாசனின் நூற்றாண்டு விழாவும் மதுரையில் நடந்தது. இந்த மாநாட்டு கருத்தரங்கு கட்டுரைகளைத் தொகுத்து, கவிஞர் வாணிதாசன் புலமையும் தமிழ் கவிஞர்களின் தனித்தன்மையும் என்ற தலைப்பில் புத்தகம் வெளியாகியுள்ளது. இதில் கவிஞர் வாணிதாசனின் கவிதை நயம் பற்றி பல்வேறு தலைப்புளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மேலும் கவிஞர்கள் பாரதிதாசன், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், சுரதா போன்ற கவிஞர்கள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளும் உள்ளன. இதன் விலை 500ரூ. மேலும் கருத்தரங்க கட்டுரைகளைக் கொண்டு உருவான இன்னொரு நூல், தமிழ்ப் புதுக்கவிஞர்களின் எழுச்சியும் செல்வாக்கும். இந்த நூலை கவிஞர்கள் வைரமுத்து, அப்துல் ரகுமான், மேத்தா, தமிழன்பன் போன்றோர் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் அலங்கரிக்கின்றன. இதன் விலை 450ரூ. நன்றி: தினத்தந்தி.
—-
இன்னொருவனின் கனவு, குமரகுருபரன், அந்திமழை, சென்னை, விலை 220ரூ.
ஒவ்வொரு சினிமாவும் ஒரு தனிமனிதனின் கனவாகும். அந்த கனவுகளை சமகால வாழ்வின் முன்பு வைத்து சுவாரசியமாக இந்த நூல் ஆராய்கிறது. 11 தலைப்புகளில் எழுதப்பட்ட இந்த நூலில், நவீனகால பாலியல் மனநிலைகளை கட்டி எழுப்பிக் கொண்ட வரலாற்றையே காட்டக்கூடியதாக மாறுகிறது. நன்றி: தினத்தந்தி.