காந்திஜி நேதாஜி கடிதத் தொடர்புகள்
காந்திஜி நேதாஜி கடிதத் தொடர்புகள், கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், சென்னை, விலை 90ரூ.
சுதந்திரப் போராட்டத்தை அகிம்சை வழியில் மகாத்மா காந்தி நடத்திக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் ஆயுதம் ஏந்தினால்தான் சுதந்திரம் பெறமுடியும் என்று கருதினார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் நேதாஜி வெற்றி பெற, காந்தியின் வேட்பாளர் பட்டாபி சீத்தா ராமையா தோல்வி அடைந்தார். பட்டாபியின் தோல்வி, என் தோல்வி என்று காந்தி கூறியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து காந்திக்கும், நேதாஜிக்கும் நடந்த கடிதப் போக்குவரத்து, வரலாற்று முக்கியம் வாய்ந்தது. அந்தக் கடிதங்களை மொழிபெயர்த்து, புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்கள். சிறந்த வரலாற்று ஆவணம். நன்றி: தினத்தந்தி, 21/10/2015.
—-
திருக்குறள் கதைகள், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, விலை 90ரூ.
திருக்குறள் கருத்துக்களை அடிப்படையாக வைத்து, சிறுகதைகளை எழுதியுள்ளார் கவிஞர் நெல்லை ஆ. கணபதி. மொத்தம் 88 கதைகள் உள்ளன. சிறுவர் சிறுமியர்களுக்கு வழிகாட்டக்கூடிய நல்ல புத்தகம். பரிசளிப்பதற்கு உகந்தது. நன்றி: தினத்தந்தி, 21/10/2015.