காந்தி கணக்கு
காந்தி கணக்கு, அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி, சூரியன் பதிப்பகம், லியோலேபிள் கட்டடம், இடுவம் பாளையம், திருப்பூர், பக். 120, விலை 100ரூ.
வ.உ.சி. கண்ணனூர் சிறையில் இருந்தபோது தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்து வந்த வேதியன்பிள்ளை என்பவர் ரூ. 5000த்தை, வ.உ.சியிடம் ஒப்படைத்துவிடுமாறு, காந்தியடிகளிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். அந்தப் பணம் 8 ஆண்டுகளாக ஒப்படைக்கப்படவில்லை. பின்னர் வேதியன்பிள்ளை இந்தியாவிற்கு வந்து வ.உ.சி.யையும் அழைத்துக் கொண்டு போய் காந்தியை நேரடியாகச் சந்தித்து அப்பணத்தைப் பெற்றுத் தந்ததாக இந்நூலாசிரியர் கூறுகிறார். இது இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட நிகழ்வு என்று ஆதாரத்தையும் காட்டுகிறார். அத்துடன் காந்திய வரலாற்றின் இன்னொரு முகத்தை நாம் அறிந்து கொள்ளும்விதமாக பல நிகழ்வுகள் இந்நூலில் தரப்பட்டுள்ளன. காந்தி கணக்கு என்பதன் பொருள் நமக்கு லேசாகப் புரிய ஆரம்பிக்கிறது.
—-
இல்வாழ்வின் வழிகாட்டி பாகம் 1, 2, டாக்டர் நா. சோமு டிரைக்காலஜி ரிசர்ச் பவுண்டேஷன், 52/எஃ 49, முதல் பிரதான சாலை, அண்ணாநகர், சென்னை 102, பக். 351+255, விலை ரூ. 160, ரூ. 140.
உடலுறவு குறித்த பழமையான மரபுகளை மூட நம்பிக்கைகளை உடைத்து, அறிவியல் பூர்வமாக நமக்குக் கற்றுத்தரும் நூல். நூல் முழுவதும் தாம்பத்திய உறவில் கடைப்பிடிக்க வேண்டிய நுணுக்கங்களைச் சொல்லித் தருகிறார் ஆசிரியர். உடலுறவை இல்உறவு என்று நாகரிகமாகச் சொல்கிறார். உணர்வுகள் இல்லையேல் எந்த ஒரு உயிரினமும் உருவாகாது. வாழாது என்பது நூலில் நிறுவப்பட்டுள்ளது. வியப்பூட்டும் தகவல்களைக் கொண்டு, எது நிறைவான உடல்உறவு, அதில் எது ஆரோக்கியமானது என்பதை புதிய கோணத்தில் ஆராய்ந்து தம்பதியருக்கு வழிகாட்டும்விதமாக அமைந்துள்ளது நூல். நன்றி: குமுதம், 20/11/2013.
—-
பெண்களுக்கான பயனுள்ள குறிப்புகள், கண்ணப்பன் பதிப்பகம், 4/20, திருவள்ளுவர் தெரு, ஈக்காடுதாங்கல், சென்னை 32, விலை 50ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-023-6.html
பெண்களுக்கு பயனுள்ள யோசனைகளைக் கூறுகிறார், அர்ச்சனா நடராஜன். நன்றி: தினத்தந்தி, 13/11/2013.