சமயங்களின் அரசியல்

சமயங்களின் அரசியல், விகடன் பிரசுரம், அண்ணாசாலை, சென்னை 2, விலை 85ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-838-1.html

ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரியர்கள், சமய உணர்வாளர்கள் என பசி கொண்டவர்கள் வாசிக்கும்போது இது நூலாக தெரியாது. கடலாகத் தெரியும் என்கிறார் நூல் ஆசிரியர் பேராசிரியர் தொ. பரமசிவம். அது உண்மைதான். அத்தனை தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற தொ. பரமசிவம், சமயங்கள் தொடர்பான பேராசிரியர் சுந்தர் காளியுடன் உரையாடிய பகுதியும் இதில் இடம்பெற்றுள்ளது.  

—-

 

டாக்டர் அம்பேத்கரின் படைப்புகள் ஓர் அறிமுகம், மு. நீலகண்டன், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, இன்டஸ்ரியர் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 185ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-918-9.html

இந்திய அரசியல் சட்டம் உருவாக காரணமாக இருந்த டாக்டர் அம்பேத்கர், அறிவியல் ரீதியான கருத்துக்களையும், புரட்சிகரமான சிந்தனைகளையும் கொண்டவர். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே அவர், வளமையான இந்தியாவை உருவாக்க எண்ணம் கொண்டு பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதி இருக்கிறார். அவரது படைப்புகளை அரசியல், பொருளியல், சட்டம், சமூகவியல், சமயம் என 5 வகையாக பிரித்து அவற்றில் உள்ள சாரம் முழுவதையும் அருமையாக தொகுத்து தந்துஇருக்கிறார் ஆசிரியர். இந்தியா பாகிஸ்தான் உறவுடன் இருக்க வேண்டும், மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும். மாநில சுயாட்சியின் அவசியம் போன்றவை பற்றி அம்பேத்கரின் கருத்துக்களை தெரிந்து கொள்ள உதவியாக இருக்கிறது இந்த நூல். நன்றி: தினத்தந்தி, 2/7/2013

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *