சிரிப்பாய் சிரிக்கும் தீபாவளி
சிரிப்பாய் சிரிக்கும் தீபாவளி, அகிலா கார்த்திகேயன், தென்றல் நிலையம், விலை 60ரூ.
கதை எழுதுவது அதுவும் நகைச்சுவையாக எழுதுவது வெகு சிலருக்கே கைவந்த கலை, அந்த வரிசையில் நிச்சயம் இடம்பெறுகிறவர் அகிலா கார்த்திகேயன். அடிக்கிற பச்சையில் மேட்சிங் பிளவுஸ், காடி பச்சையில் கைப்பை, ஜோடி பச்சைக் காலணிகள் என்று ஒரு பச்சைத் தமிழச்சியாய் அவளை நோக்குங்கால்… முதலில் அரிவாள் என்றுதான் அந்த வன்முறைப் படத்துக்குப் பெயர் வைத்திருந்தனர். இவர் பலமாக எதிர்க்கவே அவள் அறிவாள் என்று பெயரை மட்டும் மாற்றி… இப்படியாக இருபத்தைந்து கதைகளைத் தொகுதது வெளியிட்டிருப்பதோடு நானும் என் எழுத்தும் என்று ஒரு கட்டுரையையும் சேர்த்திருக்கிறார். ஒரே ஒரு வோட்டு என்ற தலைப்பில் தாம் ஒரு கதையை எழுதியதாகவும் அந்த அரசியல் நையாண்டிக் கதையைப் பிரசுரித்ததே பெரிது என்று அந்த வார இதழ்க்காரர்கள் நினைத்து, குறைந்த பட்சம் கதை வெளியான இதழின் ஒரு பிரதியைக்கூட அவர்களுக்கு அனுப்பத் தோன்றவில்லை என்றும் அதில் வருத்தப்பட்டிருக்கிறார். இதில் உள்ளவை பெரும்பாலும், மங்கையர் மலர், கல்கி, தினமலர் போன்ற தீபாவளி மலர்களில் வெளியான டாபிகல் கதைகள். -சுப்ர. பாலன். நன்றி: கல்கி, 17/3/13.
—-
ஒருவரி மருத்துவம், மெலட்டூர் நாராயணபாரதி, ஜெயஹனுமான் பதிப்பகம், அவென்யூ தேவ் அடுக்கம், ராமமூர்த்தி காலனி 3, திரு.வி.க. நகர், சென்னை 82, விலை 20ரூ.
இது புதுவிதமான மருத்தவ புத்தகம். ரத்த விருத்திக்கு மாதுளம் பழச்சாறு பருகவும், பாம்பு கடிக்கு, வாழைப்பட்டைச்சாறு தரவும், கல்லீரல் நன்கு செயல்பட அருகம்புல் கணாயம் குடிக்கவும், சர்க்கரை நோயை வேப்பிலை கட்டுப்படுத்தும்… இப்படி 1000 மருத்துவக் குறிப்புகள் கொண்ட பயனுள்ள நூல். நன்றி; தினத்தந்தி, 12/9/12.