சொன்னால் நம்ப மாட்டீர்கள்
சொன்னால் நம்ப மாட்டீர்கள், சின்ன அண்ணாமலை, சந்தியா பதிப்பகம், விலை 160ரூ.
பத்து வயதில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பள்ளி இறுதி வகுப்பில் இடை நீக்கம் செய்யப்பட்டவர், 42ம் ஆண்டு நடந்த ஆகஸ்டு புரட்சியில் கைதானபோது, திருவாடனை சிறையை உடைத்து ஊர் மக்களால் விடுதலையானவர், சின்ன அண்ணாமலை. அவர் வாழ்வில் நடந்த பல்வேறு சம்பவங்களைச் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இந்த நூலில் கூறியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 16/12/2015
—-
ஜெயகாந்தன் உரைகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 60ரூ.
ஈரோட்டில் ஜெயகாந்தன் ஆற்றிய இரண்டு சொற்பொழிவுகளின் தொகுப்பு நூல். தேசியக் கவிஞனும் தேசத்தின் கடமையும், புத்தகம் ஆகிய தலைப்பில் அவர் ஆற்றிய உரைகள் ஏற்றமும், இறக்கமும், கவித்துவம் மிக்க ஆழமான கருத்துக்களைக் கொண்டவை. இவை கேட்பதற்கு மட்டுமல்ல, படிப்பதற்கும் சுவாரசியமானவை. நன்றி: தினத்தந்தி, 16/12/2015