தஞ்சை மண்ணின் தமிழ்ச் சான்றோர்கள்
தஞ்சை மண்ணின் தமிழ்ச் சான்றோர்கள், கே. இளந்தீபன், குடந்தைத் தமிழ்ச்சங்கம், கும்பகோணம் 612001, விலை 100ரூ.
தஞ்சை மண்ணில் தோன்றி தமிழ்நாட்டுக்கு அரும்பணியாற்றிய சான்றோர்கள் பலர். அவர்களில் தமிழ்த்தாத்தா உ.வே.ரா. கிருஷ்ணமூர்த்தி, கு.பா.ராஜகோபாலன், தி. ஜானகிராமன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், குன்றக்குடி அடிகளார், சுரதா, சீர்காழி கோவிந்தராஜன் உள்பட 24பேர்களின் வாழ்க்கை வரலாறுகள் கொண்ட புத்தகம் இது. சரளமான நடையில் நூலை எழுதியுள்ளார் கே. இளந்தீபன்.
—–
சுக்கிரநீதி, பாரி புத்தகப் பண்ணை, 184-88, பிராட்வே, சென்னை 108, விலை 200ரூ.
சுக்கிரரால் இயற்றப்பட்ட நூல் அவ்சநசம். அது விரிந்து பரந்த நூல் ஆதலால், அதை சுருக்கமாகத் தொகுத்த நூல் சுக்கிர நீதி ஆகும். இந்த நீதி நூல் அறநூல்களுக்கு மாறுபடாமல் இயற்றப்பட்ட பொருள் நூலாகும். அரசனும் குடிமக்களும் மேற்கொள்ள வேண்டிய ஒழுக்க விதிகள் பற்றியும், அரசியலைப்பற்றியும், வருணாசிரம தருமங்களைப் பற்றியும், இந்நூலில் தெளிவாகவும் விளக்கமாகவும் கூறப்பட்டுள்ளது. தென்மொழி, வடமொழி ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் வடமொழியிலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்த நூல் நீண்ட இடைவெளிக்குப் பின் வெளிவந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 09 ஜனவரி 2013.