தமிழ்க்காதல்
தமிழ்க்காதல், வ.சுப. மாணிக்கம், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை 4, பக். 416, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-743-8.html
உலகம் முழுக்க காதல் இலக்கியங்கள் கணக்கின்றி இரந்தாலும் வாசிக்க சுவையூட்டுவது, முறையாக வாழ வழிகாட்டுவது தமிழக் காதல் இலக்கியங்கள்தாம். எது நல்ல காதல் எனத் தேடித் திரிவோருக்கு, குறுந்தொகை நற்றிணை, நெடுநல்வாடை, கலித்தொகை முதலிய பல்வேறு அக இலக்கிய நூல்களிலிருந்து மட்டுமின்றி திருக்குறள், தொல்காப்பியம் ஆகிய நூல்களிலிருந்தும் பாடல்களை மேற்கோள்காட்டி, தமிழ் இலக்கியங்கள் சொல்வதே நல்ல காதல் என எடுத்துரைக்கிறது இந்த நூல். நூலாசிரியரின் பழுத்த அனுபவத் திறனின் வெளிப்பாடாய் வியக்கத்தக்க உவமைகள், சுண்டியிழுக்கும் சுவையான நடை மூலம் தங்குதடையின்றி வாசகனை வாசிக்கச் செய்து கட்டியிழுக்கின்றன இந்நூலில் உள்ள கட்டுரைகள். சங்ககாலத் தமிழர்களின் பரத்தமை ஒழுக்கம் குறித்தும் பெண்ணுரிமை குறித்தும் நடுநிலையோடு குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டத்துக்கு நூலாசிரியர் எழுதிய ஆங்கில நூலின் கருத்துகள் இந்நூலில் விரிவாகவும் ஆழமாகவும் கூறப்பட்டுள்ளன. நன்றி: தினமணி, 1/7/2013
—-
சோழர் கால ஆடற்கலை, இரா. கலைக்கோவன், சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை 78, விலை 225ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-863-0.html
கண் மருத்துவர் முனைவர் இரா. கலைக்கோவன், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல்வர், பாண்டியர், சோழர் கால கோவில்களில் ஆய்வு நடத்தி பழங்கால ஆடற்கலை பற்றிய தகவல்களை சேகரித்து இருக்கிறார். 20 ஆண்டு உழைப்பில் உருவான நூலில் சிற்பங்கள், கல்வெட்டுகள், ஓவியங்களில் சில பெருமான் ஆடிய காரணங்கள், கலைஞர்களின் ஆடை நாகரீகம், இசைக் கருவிகள், வாழ்க்கை முறைகள், பாடகர்கள், நாடகசாலை, அரங்கம், மணவாழ்க்கை போன்ற அனைத்து விவரங்களும் ஆதாரங்களுடன் இடம்பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 21/8/2013.