தாவூத் இப்ராகிம்
தாவூத் இப்ராகிம், ஆங்கிலத்தில் எஸ். ஹுசைன் ஸைதி, தமிழில் கார்த்திகா குமாரி, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 350ரூ.
மும்பை மாபியா என்றதும் நினைவுக்கு வரும் பெயர் தாவூத் இப்ராகிம். ஆனால் அவனுக்கு முன்பே மும்பை பல தாதாக்களை உருவாக்கி இருக்கிறது. ஹாஜி மஸ்தான், வரதா பாய் என்கிற வரதராஜ முதலியார், கரீம் லாலா ஆகியோர் தாவூத் இப்ராகிமின் முன்னோடிகள். இவர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை பத்திரிகையாளர் எஸ். ஹுசேன் ஸைதி ஆங்கிலத்தில் சுவையாக எழுதியுள்ளார். இதைத் தமிழில் கார்த்திகா குமாரி மொழிபெயர்த்துள்ளார். மும்பையில் தாதாயிசம் கருவான விதம், வளர்ந்த கதை, தாதாக்களின் தொழில்கள், தாதாக்களின் தனி வாழ்க்கை, அரசியல் தொடர்புகள், பாலிவுட் நெருக்கம் என்று மாபியாவின் அறுபது ஆண்டு கால அசைவுகள் அனைத்தையும் விறுவிறுப்பாக விவரித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 14/10/2015.
—-
புதிய உலகம், உதயை மு. வீரையன், பாவை பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ.
கல்வியின் இன்றைய நிலை, மொழி பற்று, மகளிர் நிலை, நாட்டில் மலிந்து வரும் போலித்தனங்கள், சமுதாய, அரசியல் சீர்கேடுகள் பற்றி இந்த நூலில் அலசப்படுகிறது. நன்றி: தினத்தந்தி, 14/10/2015.