தூது வந்த வீரர்

தூது வந்த வீரர், ஏம்பல் தஜம்முல் முகம்மது, நியூலைட் புக் சென்டர், 1504ஏ, எம்ஐஜி, 3ம் முதன்மைச்சாலை, மாத்தூர் எம்.எம்.டி.ஏ, சென்னை 68, விலை 200ரூ.

150 ஆண்டுகளுக்கு முன்னர் அண்ணல் முஹம்மது நபி குறித்து, இங்கிலாந்தில் வரலாற்று ஆசிரியரும், ஆங்கில அறிஞருமான தாமஸ் கார்லைல் பேசிய பேச்சுக்கள் அடங்கிய ஆங்கிலநூல், அழகிய எளிய தமிழில், படிப்பவர்கள் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் உபயோகமான குறிப்புகளோடு தூது வந்த வீரர் என்ற மிகச்சிறந்த நூலாக வெளிவந்துள்ளது. இதில் இஸ்லாமும் மேற்கு நாடுகளும் என்ற தலைப்பில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இளவரசர் சார்லஸ் பேசிய உரையும் இடம் பெற்றிருப்பது நூலுக்கு நன்மதிப்பை அதிகரிக்கிறது. சமுதாயத்தில் சமூக நல்லிணக்கம் தழைத்து, மனிதநேய மாண்பு சிறக்க இத்தகைய நூல்கள் துணை நிற்கும்.  

—-

 

இது என்ன மாயமோ?, லட்சுமி பிரபா, திருமகள் நிலையம், சுகான்ஸ் அபார்ட்மெண்ட்ஸ், 13, சிவபிரகாசம் சாலை, தியாகராயநகர், சென்னை 17, விலை 160ரூ.

பெண்களை மையப்படுத்தி அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக எழுதப்பட்ட 3 நாவல்களின் தொகுப்பு. நாவல்கள் அனைத்தும் சோகத்தில் தொடங்கி மகிழ்ச்சியில் முடிக்கப்பட்டுள்ளன. சித்தர்களின் செயல்பாடு மற்றும் அமானுஷ்யம் கலந்து எழுதப்பட்டுள்ள இந்த நாவல்கள் கட்டுக்கதை போல இல்லாமல் நம்பும்படியாகவும் இருப்பது சிறப்பு.  

—-

 

மேதைகளின் மேதமைகள், சாரு பிரபா பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 65ரூ.

மகாத்மா காந்தி, ஆபிரகாம் லிங்கன், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். முதலான தலைவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த அபூர்வமான நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறும் நூல் சிறந்த முத்துக்களைத் தேர்ந்தெடுத்து, மாலையாகக் கோர்த்திருக்கிறார் குன்றில்குமார். நன்றி: தினத்தந்தி, அக்டோபர் 2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *