தூது வந்த வீரர்

தூது வந்த வீரர், ஏம்பல் தஜம்முல் முகம்மது, நியூலைட் புக் சென்டர், 1504ஏ, எம்ஐஜி, 3ம் முதன்மைச்சாலை, மாத்தூர் எம்.எம்.டி.ஏ, சென்னை 68, விலை 200ரூ. 150 ஆண்டுகளுக்கு முன்னர் அண்ணல் முஹம்மது நபி குறித்து, இங்கிலாந்தில் வரலாற்று ஆசிரியரும், ஆங்கில அறிஞருமான தாமஸ் கார்லைல் பேசிய பேச்சுக்கள் அடங்கிய ஆங்கிலநூல், அழகிய எளிய தமிழில், படிப்பவர்கள் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் உபயோகமான குறிப்புகளோடு தூது வந்த வீரர் என்ற மிகச்சிறந்த நூலாக வெளிவந்துள்ளது. இதில் இஸ்லாமும் மேற்கு நாடுகளும் என்ற தலைப்பில் […]

Read more

மனோதிடம் ஒரு புதுமையான பெருங்கதை

மனோதிடம் ஒரு புதுமையான பெருங்கதை, குஜராத்தி மூலம் பன்னாலால் படேல், தமிழில்-ந.சுப்ரமணியன், சாகித்ய அகடமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 608, விலை 375ரூ. படேலுக்கு ஞான பீட விருதைப் பெற்றுத் தந்திருக்கிறது இந்த நாவல். ஒரு கிராமவாசியான இந்நூலாசிரியர் முறையான கல்வி பயிலாதவர் என்னும் செய்தி, நமக்கு வியப்பைத் தரும். அவரது அனுபவ அறிவு நாவல் முழுவதும் வெளிப்டுகிறது. குஜராத்தின் கிராமப்புறத்தைப் பின்னணியாகக் கொண்ட இந்த நாவல், 1900ம் ஆண்டுவாக்கில், அங்கு கோரத் தாண்டவமாடிய பஞ்சத்தின் விளைவுகளைத் […]

Read more

திருமகள் தேடி வந்தாள்

திருமகள் தேடி வந்தாள், லட்சுமி பிரபா, திருமகள் நிலையம், சென்னை 17, பக். 280, விலை 125ரூ. To buy this Tamil book online – https://www.nhm.in/shop/100-00-0001-020-5.html பிரபல மாத நாவல்களில் வெளிவந்த இரு கதைகளைத் தாங்கியுள்ளது இந்நாவல். சுவைபட கதைக் களத்தை நகர்த்தியுள்ளதால் வாசிப்பது அலாதி மகிழ்வைத் தருகிறது. இப்புத்தகத்தில் திருமகள் தேடி வந்தாள், மாயக்கண்கள் என இரு நாவல்கள். முதல் நாவலான திருமகள் தேடி வந்தாள் யதார்த்தமான குடும்பக் கதை. கதைப்படி வசதி படைத்த இளம் பெண் சஹானாவைக் காதலிக்கும் இளைஞன் […]

Read more