நீந்திக்கடந்த நெருப்பாறு பாகம்1

நீந்திக்கடந்த நெருப்பாறு பாகம்1, அரவிந்தகுமாரன், தமிழ்லீடர், ஆஸ்திரேலியா.

போர்க்காலம் தமிழில் இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த படைப்புகள் ஈழத்து மண்ணில் இருந்துதான் முகிழ்க்க வேண்டும். ஏனெனில் அந்த சமூகமே மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது என்று சொல்லுவதுண்டு. முள்ளிவாய்க்கால் போன்ற பெரும் அழித்தொழிப்புக்கும் ஆயுதப் போராட்டத் தோல்விக்கும் பின்னர் தன்னை மீட்டெடுக்க கடந்த நான்காண்டுகளாக அச்சமூகம் போராடி வருகிறது. அதில் ஒரு பகுதியாகத்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்துவரும் படைப்புகள். அதில்ஒன்றுதான் நீந்திக்கிடந்த நெருப்பாறு என்கிற இந்த நாவல். இது ஒரு போர் நாவல். ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் மன்னார் முள்ளிக்குளத்தில் இருந்து கிளிநொச்சி வரைக்கும் போரிட்டுக்கொண்டே பின்வாங்கிக்கொண்டு வந்த விடுதலைப்புலிகளின் போரைச் சொல்கிறது இந்த நாவல். சிவம் என்கிற இளைஞன் ஓர் அணிக்குத்தலைவனாக களமாடுகிறான். சிவம் புரியும் போர் முனைச்சாகசங்கள், காட்டுக்குள் ஆழ் ஊடுருவும் இலங்கை ராணுவத்தின் அணியை வேவு பார்த்தால் போன்ற பல சம்பவங்கள் விறுவிறுப்பாக அமைந்துள்ளன. சிவத்தின் போர்முனை அனுபவங்கள் ஒரு முனை என்றால் ஒவ்வொரு இடமாக காலிசெய்துகொண்டு பின்வாங்கும் குடும்பங்களின் கதை இந்நாவலின் இன்னொரு முனை. நன்கு விளைந்திருந்த மிளகாய் பழங்களைத் தாங்கிய செடிகள், வாழைத்தார்கள் கனத்துத் தொங்கும் தோட்டம் ஆகியவற்றை அப்படியே விட்டுவிட்டு நாடோடிகளாக பின்வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள் மக்கள். உயிரிழப்பைக் குறைக்க புலிப்படை தங்கள் இடங்களை விட்டுக்கொடுத்து பின்வாங்கிக் கொண்டே இருக்கிறது. போர் நாவலுக்கே உரிய நெகிழ்வான பகுதிகள் இடம்பெற்றுள்ளன. எழுத்துரு வடிவமைப்பில் கவனம் செலுத்தாமல் விட்டது குறை. நன்றி: அந்திமழை, 1/12/13.  

—-

 

ஒரு ஊர்ல, மீச.விவேக், செந்தூரான் பதிப்பகம், 15, ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 60ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-650-1.html

சிறுவர்களுக்கான 65 நீதிக்கதைகள் அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி, 11/12/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *