பிஞ்சுச் சாவு
பிஞ்சுச் சாவு, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான சாலை, ராயப்பேட்டை, சென்னை 14,விலை 125ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-490-7.html
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் மரணம் குறித்து 87 கவிஞர்கள் நெஞ்சு பொறுக்க முடியாத வேதனையில் படைத்த கண்ணீர்க் கவிதைகளின் தொகுப்பு நூல். பாலச்சந்திரன் தன் உயிரைக் கொடுத்து உலகின் பார்வையை தமிரீழத்தின் பக்கம் திருப்பியிருக்கிறான். அவர் மார்பைத் துளைத்த தோட்டாக்கள், லட்சக்கணக்கான தமிழீழ மக்களைக் கொன்று குவித்த கொடுரத்தை உலகின் பார்வைக்குகொண்டு சென்றிருக்கிறது. அவனது ஒற்றை மரணம், ஒரு இனத்தின் சாவை பிரகடனப்படுத்தி உலகின் விழிகளை ஈரமாக்கியது. அங்கே அநியாயமாகச் சாகடிக்கப்பட்ட அப்பாவித் தமிழ்க் குழந்தைகளின் பிரதிநிதியாய், அவனது மரணம் உலக அரங்கின் முன்பாக அணிவகுப்பு நடத்தியதோடு அல்லாமல் உலகையே உலுக்கியிருக்கிறது. ராஜபக்சேவுக்கு எதிராக, கோடிக்கணக்கான நெற்றிக்கண்களை திறக்க வைத்திருக்கிறது. எங்கள் பாலச்சந்திரன் நீலம் பாரித்துக் கிடக்கிறான் நிலத்தின் மீது. புறமுதுகு காட்டாமல் புன்னகை மாறாமல், சாவின் திகைப்பு தீராமல் மரணத்தின் வடுதாங்கி, இந்த பால்ய மரணம் எதனால்? கவிஞர் இளையபாரதியின் கவிதை வரிகளை வாசிக்கும்போதே மனசு வலிக்கிறது. அவனின் வீரச்சாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தமிழகத்தின் எண்ணங்களை, மனத் துடிப்பை எட்டுத் திசைகளுக்கும் எடுத்துச் செல்லும் ஆவணமாக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் நக்கீரன் கோபால்.
—-
100 நாளில் தீர்ப்பு, நீதிபதி க. இராமசாமி, கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தியாகராயநகர், சென்னை 17, விலை 25ரூ.
தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்பதை வலியுறுத்தும் நீதிபதி க. இராமசாமி, எல்லா நீதிமன்றங்களும், வழக்குரைஞர் சங்கங்களும், வாய்தா முறைக்கு முடிவு கட்டி, குற்றவியல் விசாரணை முறைச்சட்டம் 309ஐ பின்பற்றினால் எந்த வழக்குக்கும் 99 நாட்களுக்கு மேல் போகாது என்று கூறுகிறார். பாலியல் குற்றங்களுக்கு தண்டனையை கடுமையாக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். பாலியல் குற்றங்களுக்கு கொடூரமான தண்டனைகள் விதிக்கப்பட்டு, அவை பொது இடத்தில் மக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டால்தான் இக்கொடூரமான குற்றங்கள் குறையும். ஒரு னைர் பெண்ணுக்கு 34 பேரால் இழைக்கப்பட்ட கொடுமையைவிட, குற்றவாளி கல்லெறிந்து கொல்லப்படுவது கொடூரமும் இல்லை. கொடுமையும் இல்லை என்று கூறுகிறார். சிறிய புத்தகம்தான். ஆனால் சிந்தனைக்கு உரிய கருத்துக்கள் நிறைந்த புத்தகம். நன்றி: தினத்தந்தி, 24/7/13.