பொன்னியின் செல்வன்(இளைஞர் பதிப்பு)
பொன்னியின் செல்வன்(இளைஞர் பதிப்பு), உருவாக்கியவர் – ஆர்.கே. சுப்ரமணின், ஆர்.கே.எஸ்.புத்தகாலயம், 25, பந்தடி 1வது தெரு, மதுரை 625001, விலை 66ரூ.
மாபெரும் கல்கி எழுத்தில் உருவான பொன்னியின் செல்வன் வரலாறு படைத்த புதினம். ஐந்து பாகங்கள், மொத்தம் 2500 பக்கங்கள். அதை அவசரகால இளைஞர்கள் படிக்க நேரம் கிடையாது. அதற்காக அதன் கருவைச் சிதைக்காத, சுருக்கப்பதிப்பாக அழகு குலையாமல் உருவாக்கிய ஆசிரியர் முயற்சி பாராட்டுதற்குரியது. தமிழ் வளர உதவும். ஆங்கிலத்தில் பல்வேறு இலக்கியப் படைப்புகள் சுருக்கப் பதிப்பாக வெளியிடுவது மரபாக இருக்கிறது. இளைஞர் பதிப்பு என்ற பெயரில் பொன்னியன் செல்வன் வருகை தமிழகத்தில் நிச்சயம் வரவேற்பைப் பெறும்.
—-
பாம்பாட்டிச் சித்தர் தத்துவம், ஏ.எஸ்.வழித்துணை ராமன், சங்கர் பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 600049, பக்கங்கள் 264, விலை 130ரு. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-481-1.html
சாகசக் கலை என்று பேசப்படும் மரணமில்லாப் பெருவாழ்வுக்கு உரிய போதனை அல்லது வழிமுறை தமிழ் நூல்களில் மட்டுமே காணக்கிடைக்கிறது. சிறப்பாக சித்தர் இலக்கியங்கள் இதற்கு சான்று. தாமரை இலையினிலே தண்ணீர் தங்காத தன்மைப் போலச் சகத்தாசை தள்ளிவிட்டெங்கும் தூமணியாம் விளங்கிய சோழி பதத்தைத் தொழுது தொழுது தாடாய் பாம்பே என்று பாம்பாட்டிச் சித்தர் ஏன் பாடினார் என்று பல பக்கங்களில் விளக்குகிறார் ஆசிரியர். ஆன்மிக இலக்கிய பொக்கிஷம். – எஸ்.குரு.
—-
கண்ணான என் கண்மணி, இந்திரா சவுந்தர்ராஜன், திருமகள் நிலையம், 13, சிவப்பிரகாசம் சாலை, தி.நகர், சென்னை 600017, பக்கங்கள் 224, விலை 90ரூ.
அனுஷா என்னும் சிறுமியின் தாய் தந்தை காதல் மணம் புரிந்தவர்கள். பெற்றோர் எதிர்ப்பை மீறி நடந்த திருமணம் அது. தாய் திடீரென இறந்து போனதால் தந்தையின் பராமரிப்பில் வளர்கின்றனாள். பலரும் அனுஷாவின் தந்தை சங்கரநாராயணனை மறுமணம் செய்ய வற்புறுத்தியும், மகள் மீதுள்ள பாசத்தால் அவன் அதை மறுத்து விடுகிறான். அனுஷாவுக்கு ஒரு சித்தி கிடைக்கிறாளா? டீச்சர் பாரதி காதலனைக் கரம் பற்ற முடிந்ததா? என்பதையெல்லாம் விறு விறுப்பான நடையில் விவரிக்கிறார் இந்திரா சவுந்தரராஜன். இதே நூலில் உள்ள நன்றியுடன் நந்தினி என்னும் இன்னொரு கதை, அவருடைய வழக்கமான பாணியில் பொதிகைமலையில் வாழும் குணங்குடி சித்தரின் அற்புத ஆற்றல்களின் பின்னணியில் அமைந்துள்ளது. இரு நெடுங்கதைகளுமே சுவாரசியம் குன்றாதவை. – கவுதம நீலாம்பரன்.. நன்றி: தினமலர் 22 ஜனவரி 2012.