மகாகவி பாரதியும் சங்க இலக்கியமும்
மகாகவி பாரதியும் சங்க இலக்கியமும், ய. மணிகண்டன், பாரதி புத்தகாலயம், சென்னை 15, பக். 112, விலை 60ரூ. To buy This Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-486-2.html
மகாகவி பாரதியார் திருக்குறள், நாலடியார், சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், ஔவை நூல்கள், சித்தர் பாடல்கள், வள்ளலார், தாயுமானவர் போன்றோரது பாடல்களைத் தனது எழுத்தில் பதிவு செய்துள்ளதை நாம் அறிவோம். ஆனால் அவர் சங்க இலக்கியங்க்ளையும், பழந்தமிழ் இலக்கியங்களையும் எந்த அளவுக்கு அறிந்திருந்தார். எந்த அளவுக்கு அவற்றைத் தனது எழுத்துக்களில் பதிவு செய்திருக்கிறார் என்பதை இந்நூல் உணர்த்துகிறது. பாரதி சங்க இலக்கியங்களை நன்கு அறிந்திருந்தபோதிலும் அவருடைய எழுத்தாக்கங்கள் பலவும் புறநானூற்றோடு தொடர்புடையவையாக அமைந்துள்ளன. அவர் புறநானூறைப் பற்றிக் குறிப்பிடும்போது புறநானூறு என்னும் அரிய தமிழ் நூல் எத்தனையோ பல நூற்றாண்டுகளின் முன் தொகுக்கப்பட்டது. பின்னிட்ட நூல்களைப்போல இது புராணக்கதைகளை விரிக்கும் தன்மையுடையதில்லை. அக்காலத்தில் தமிழ்நாடு இருந்த நிலைமையையும் தமிழ் மன்னர்கள் செய்த போர்களையும் இன்னும் பல இயற்கை செய்திகளையும் விளக்கிக் கூறுவது (இந்தியா 8/9/1906) என்கிறார். பன்முகம் கொண்ட பாரதியின் அறியப்படாத ஒழுக்கத்தைக் காட்டும் ஆவணமாக அமைந்துள்ளது இந்நூல். நன்றி: தினமணி, 09/4/2012.
—-
நீதிக்கதைகள், நா. ரமேஷ்குமார், சாய்சூர்யா எண்டர் பிரைசஸ், 32பி, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை 17, விலை 99ரூ.
குழந்தைகளுக்கான 150 நீதிக்கதைகள் இப்புத்தகத்தில் உள்ளன. படங்களோடு கூடிய பெரிய அளவு புத்தகம்.
—-
வெற்றிக்கு 10 வழிகள், குன்றில் குமார், தாமரை பப்ளிகேஷன்ஸ், 41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 55ரூ.
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால், அதற்கென சில வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அந்த வழிகளை இந்நூலில் கூறுகிறார் குன்றில் குமார். நன்றி: தினத்தந்தி, 26/9/2012.