மனிதன்
மனிதன், ஏ.எஸ். ராகவன், திருமகள் நிலையம், 13, சிவப்பிரகாசம் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-870-0.html
பிரபல எழுத்தாளர் ஏ.எஸ். ராகவன் எழுதிய சிறந்த நாவல் மனிதன். ஆனந்த விகடன் வெள்ளிவிழா நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல் இது என்பதில் இருந்தே இதன் தரத்தை நன்கு உணரலாம். தெளிந்த நீரோடை போன்ற நடையில் இந்த நாவலை எழுதியிருக்கிறார். ஏ.எஸ். ராகவன், கதாபாத்திரங்கள் உயிரோவியங்களாகத் திகழ்கின்றன. குறிப்பாக பூமா ஓர் அற்புத சிருஷ்டி. நன்றி: தினத்தந்தி, 28/11/2012.
—-
சிவஞானபாடியம் சிற்றுரையும், அருள்மிகு மாதவச் சிவஞான யோகிகள், பகுதி 5 (3, 4, 5 ஆம் சூத்திரங்கள்) பதிப்பாசிரியர்-ஆதி.முருகவேள், திருவாவடுதுறை ஆதினம், திருவாவடுதுறை 609803, பக். 212, விலை 150ரூ.
மாதவசிவஞான முனிவர் சித்தாந்த சைவப் பேரொளியாகத் திகழ்ந்தவர். மெய்கண்டார் அருளிய சிவஞானபோகதத்தின் உண்மைப் பொருளை சிவஞானபோதச் சிற்றுரை, சிவஞான பாடியம் என்னும் பேரூரை ஆகியவற்றால் தெளிவும் திட்பமும் உறச் செய்தவர். நூலின் பெயர் சிவஞான பாடியமா? மாபாடியமா? என்பதில் சித்தாந்த உலகில் இன்றளவும் குழப்பம் நிலவி வருகிறது. அதற்குத் தீர்வாக, சிவஞான யோகிகள் அருளிய பெயர் பாடியமே என்பதை உறுதி செய்கிறது ஒரு கட்டுரை. பசு (உயிர்) உண்மைக்குப் பிரமாணம், தேக ஆன்மவாத மறுப்பு, இந்திரிய ஆன்மவாத மறுப்பு, சூக்கும தேக ஆன்மவாத மறுப்பு, பிராண ஆன்மவாத மறுப்பு, மாயை, கன்பங்களின் இலக்கணம் என்பனவற்றுக்குத் தடை, விடை, ஏதுக்கள், உதாரணம், மேற்கோள், அதிகரணங்கள், ஆகம அளவைச் சான்று, சூத்திரம், பொழிப்புரை, விளக்கம் அனைத்தும் தரப்பட்டுள்ளன. சைவ சித்தாந்தம் பயின்றவர்களைத் தவிர, பிறர் குருநாதர் துணையின்றி இத்தகைய மெய்ஞ்ஞான நூல்களைப் படித்துப் புரிந்து கொள்வது சற்றுக் கடினம்தான் என்றாலும், இதில் தனித் தனியாகப் பிரித்துத் தரப்பட்டுள்ள விளக்கங்கள், அந்தக் கடினத்தை எளிமையாக்கியுள்ளன. மேலும் சி. அருணைவடிவேல் முதலியார் வழங்கியுள்ள அணிந்துரை நூலின் சாரத்தை மிகவும் எளிமையாகப் புரிந்து கொள்ள துணைபுரிகிறது, மெய்கண்டாரின் சிவஞான போதத்தைப் படித்துவிட்டு இதைப் படித்தால் எளிதில் விளங்கிக்கொள்ளலாம். நன்றி: தினமணி, 19/8/2013.