மனிதன்
மனிதன், ஆர். ராமநாதன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 24, கிருஷ்ணா தெரு, தியாகராய நகர், சென்னை 17, விலை 90ரூ.
நாம் பல வரலாறுகளைப் படிக்கிறோம். ஆனால் நமது மனித இன வரலாறு நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அறிவியல் சார்ந்த இந்நூல் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.
—-
தமிழ்ச் சொற்கள் (சொற்பொருள் விளக்கம்), முனைவர் அ. ஜம்புலிங்கம், இந்துமதி பதிப்பகம், 3, லால்பேட்டை தெரு, சிதம்பரம் 608001, விலை 150ரூ.
செம்மொழியாம் தமிழ் மொழியில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளின் பொருள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. ஒரே சொல்லுக்குப் பல பொருட்கள் கூறியிருப்பது சிறப்பு. பிறமொழி சொற்களை கலந்து பேசும் இன்றைய காலகட்டத்தில் இந்த நூல் மூலம் தூயூ தமிழ் சொற்களை அறிய முடிகிறது. போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இது பயனுள்ள புத்தகம்.
—–
துக்காராம், ஆர். கே. நாகு, சாகித்திய அகாடமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 50ரூ.
மராட்டிய மாநிலத்தில் வாழ்ந்தவர் துக்காராம். இறைவனை போற்றி பாடி, அவனடியை பற்றிக்கொள்ளும் தனது பக்திப் பாடல்களின் வாயிலாக மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர். ஆனால் துக்காராம் பக்தி மார்க்கத்தை வளர்த்தெடுத்தவர் என்பது ஒரு புறம் இருந்தாலும், அவர் இலக்கிய செறிவு மிகுந்த கவிஞராகவும் திகழ்ந்தார் என்பதுடன், அவரது சமூதாய பின்னணி வாழ்க்கை போன்றவற்றையும் கூறியுள்ளார் நூல்ஆசிரியர். பாலசந்திர நெமதே என்பவர் எழுதிய இந்நூல் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 3/7/2013