மனித வசியம் அல்லது மனக் கவர்ச்சி
மனித வசியம் அல்லது மனக் கவர்ச்சி, மறைமலை அடிகள், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை – 600 017, பக்கம்: 216, விலை: ரூ.105.
மறைமலையைடிகல் எழுதிய மிகச் சிறந்த நூல்களில் ஒன்று. இது மனித வசியம் என்றால் மெஸ்மரிசம், ஜிப்னாடிசம் போன்றவற்றை, இந்நூலில் அடிகளார் விவரிக்கவில்லை. மனிதவசியம் என்பது, மக்களின் உள்ளத்தை கவர்வதாகிய ஒர் ஆற்றலை குறிக்கும். இந்த ஆற்றல், இயற்கையாக எல்லாரிடத்தும் காணப்படுவதில்லை. இது, சிலரிடமே காணப்படும். மனித வசியம் போன்ற துறை தொடர்புடைய நூல், தமிழில் இதுவே முதல் நூல் என்று சொல்லலாம். நாவல், கதைகள் படிப்பது போல், வேகமாக இந்நூலை படித்து விடமுடியாது. நன்றி: தினமலர் சென்னை (24-03-2013).
—-
நாட்டுக் கணக்கு, சோம. வள்ளியப்பன், சிக்த்சென்ஸ். தி.நகர், சென்னை – 6000 17. விலை: ரூ.110, பக்கம்: 170. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-810-3.html
சாதாரண மனிதர்கள் தங்கள் சம்பளக் கணக்கு, வரவு செலவை மட்டுமே எளிதாக அறிய முடியும். நாட்டின் பொதுச் செலவு, அரசு மக்களுக்கு தரும் மானியங்கள், பெட்ரோல் விலை நிர்ணயம் போன்ற பொருளாதார விஷயங்களை, எளிதில் அறியும் வண்னம் தமிழில் தந்திருகிறார் ஆசிரியர். குழப்பமற்ற தெளிவானநடை, அதற்கான விளக்கங்கள் ஆகியவை, இப்படைப்பின் நேர்த்தியாகும். நன்றி: தினமலர் சென்னை (24-03-2013).