ஸாம்ராட் அசோகன்
ஸாம்ராட் அசோகன், பண்மொழி பதிப்பகம், சி, விகாஸ் அடுக்ககம், 9-8 பாலகிருஷ்ணா தெரு, மைலாப்பூர், சென்னை 4.
மாமன்னர் அசோகனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்துப் பின்னப்பட்ட நாவல் இது. இதன் 1வது, 2வது பாகங்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. இந்த நாவலை விறுவிறுப்பான நடையில் எழுதியுள்ளார் சித்தார்த்தன். நன்றி: தினத்தந்தி, 20/11/2013
—-
இறைத்தூதர் முஹம்மத், எம்.ஆர்.எம். அப்துற்ரஹீம், தமிழில் சாத்தான்குளம் அப்துர் ஜப்பார், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை முதல் மாடி, தியாகராய நகர், சென்னை 17, பக். 816, விலை 500ரூ.
230 ஆண்டுகள் ஆனாலும் ஒரு மனித சமுதாயத்தால் செய்ய முடியாத சாதனைகளை நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) சாதித்துவிட்டார்கள் என்று விளப்ஸ் ஹெட்டி என்ற வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். மனித சமுதாயத்திற்கு அனுப்பட்ட இறுதி இறைதூதர் முஹம்மது (ஸல்) அவர்களை பற்றிய தெளிவான அறிமுகம், வரலாற்றையும் சொல்லி இருக்கிறது இந்த நூல். ஆரம்ப காலகட்டம் என்ற தலைப்பில் அரபுகளை பற்றி அறிமுகம் செய்துள்ள பாணியே மிகவும் அற்புதமானது. இறைவனின் இல்லமான கபத்துல்லாஹ்வின் உன்னதத்தை அதன் வரலாற்றி மிக விரிவாக எடுத்துக்காட்டியுள்ளது. முஹம்மது (ஸல்) வரலாற்றை அவர்களின் பிறப்பிலிருந்து ஆரம்பிக்கும்போது மிக விறுவிறுப்பாக சுவையாக எழுதப்பட்டுள்ளது. நாயம் (ஸல்) மனைவி கதிஜா ரலி தியாகத்தை வாசிக்கும்போது அந்தத் தாயின் உன்னதம் மெய்சிலிர்க்க வைக்கிறது. முஹம்மதை வெட்டி வருகிறேன் எனப் புறப்பட்ட உமரின் மனமாற்றத்தையும், தாயிபில் முஹம்மது நபிக்கு நேர்ந்த கஷ்டங்களை படிக்கும்போது கண்களில் நீர் வருவதைத் தவிர்க்க இயலாது. 41 அத்தியாயங்களும் அற்புதமான இலக்கிய நடையில் எழுதியுள்ளார் ஆசிரியர். நபி குறித்த பொய் பிரச்சாரங்களுக்கு தரப்பட்டுள்ள பதிலால் நபிகள் மாமனிதர் என்பதை உணர முடிகிறது. உண்மையை நேசிக்கக் கூடிய ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய ஓர் உன்னதமான இறைதூதரின் வாழ்க்கை சரிதை இது. நன்றி: தினமணி, 29/7/2013.