ஸ்ரீமத் பாகவதம்
ஸ்ரீமத் பாகவதம், வர்த்தமானன் வெளியீடு, பக். 900, விலை 300ரூ.
மகாபாரதத்தை அருளிய பின்னரும் வியாச முனிவருக்குச் சாந்தி ஏற்படவில்லை. தம் மனக் குறையை நாரதரிடம் தெரிவித்தார். நாரதர், மகாபாரதத்தில் பகவானின் கல்யாண குணங்களைவிடத் தர்மங்களை அதிகமாக விவரித்துள்ளீர். கிருஷ்ண பரமாத்மாவின் மகிமைகளைச் சொல்லவில்லை. அவற்றை விரிவாக வருணிக்கும் நூல் ஒன்றைச் செய்தால் தங்கள் மனம் சாந்தி அடையும் என்றார். வியாசரும் மனமகிழ்வுடன் இந்தப் பாகவதத்தை உண்டாக்கித் தம் தவப் புதல்வரான சுக முனிவருக்கு அருளினார். அவர், மோட்சத்தை விரும்பிய பரீட்சித்து மன்னனுக்கு இதனை உபதேசித்தார். முக்தி பெற விரும்புவோர் இப்புண்ணிய நூலினைப் படித்து பயனடைவார்களாக. நன்றி: கல்கி, 8/6/2014.
—-
ஒரு கதாசிரியரின் கதை, ஜெயந்தி நாகராஜன், தாமரை பப்ளிகேஷன்ஸ்.
உலகெங்கும் பரவலாக பேசப்பட்ட ஹாரி பாட்டர் கதையை எழுதிய ஜே.கே.ரோலிங்கின் வாழ்க்கை வரலாறுதான் இந்த புத்தகம். எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணம் இந்த புத்தகத்தை படித்தால் ஏற்படும். மகிழ்ச்சி, கவலை, ஏமாற்றம், மனஉறுதி, வெற்றி என இவரது வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு கட்டத்தையும் புத்தகம் விளக்குகிறது. ரோலிங்கின் வாழ்க்கை மட்முல்ல, அவர் வெற்றிக்கு பின் அவர் தொலைக்காட்சி, பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியும் இடம்பெற்றுள்ளன. குழந்தைகள், வாலிபர்கள், முதியவர்கள் என, அனைத்து தரப்பினரும் படிக்க வேண்டிய புத்தகம் இது. இருபத்தைந்து தலைப்புகளில், 109 பக்கங்களை கொண்ட இந்த புத்தகம் ஆலந்தூர் எம்.கே.என். சாலை, நூலகத்தில் வாசிக்க கிடைக்கிறது. நன்றி:தினமலர், 29/6/2014.