ஸ்ரீ வைஷ்ணவ கட்டுரைக் களஞ்சியம்
ஸ்ரீ வைஷ்ணவ கட்டுரைக் களஞ்சியம், வித்வான் ஸ்ரீராம ஐயங்கார், திருமால் பதிப்பகம், 20/53, ஆபிரகாம் தெரு, மயிலாப்பூர், சென்னை 4, பக். 262, விலை 100ரூ.
களஙஞ்சியங்களில் தானியங்களை பாதுகாப்பாக வைத்து, தேவையான பொழுது எடுத்து பயன்படுத்துவர். இந்நூலின் வைணவ கருத்தக்கள், செய்திகள் பாதுகாப்பாக அமைந்துள்ளன. நமக்குத் தேவையான பொழுது படித்துப் படித்து பயன்பெறலாம். இந்நூலில் 80 கட்டுரைகள் உள்ளன. தவறில்லாத அச்சும், நூலின் கட்டுமானமும் நூலிற்கு மேலும் பெருமை சேர்க்கின்றன. -டாக்டர் கலியன் சம்பத்து.
—-
ஜே.கிருஷ்ணமூர்த்தி உரையாடல்கள், தமிழில்-எஸ். ராஜேஸ்வரி, நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, தி.நகர், சென்னை 17, பக். 200, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-703-5.html
முன்னுரையில் மொழிபெயர்ப்பாளர் குறிப்பிட்டதுபோல இந்த தொகுப்பில், முக்கியமான வாழ்வியல் சிந்தனைகளை புதிய கோணத்தில் ஆழமாக ஆய்வு செய்யும் ஜே.கே.வின் தனித்தன்மையை பார்க்க முடிகிறது. 13 தலைப்புகளில் வாழ்க்கையோடு தொடர்புடைய ஐயங்களுக்கு சரியான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. கையடக்க அளவில் இந்த தொகுப்பை தயாரித்து வழங்கயுள்ள பதிப்பாளரையும், எளிய தமிழில் மொழிபெயர்த்து அளித்துள்ள எழுத்தாளரையும் பாராட்ட வேண்டும். -ஜனகன். நன்றி: தினமலர், 11/3/2012.