ஒரு சாமானியனின் சாதனை

ஒரு சாமானியனின் சாதனை, எஸ்.கே. இளங்கோவன், மணிமேகலைப் பிரசுரம், விலை 65ரூ. ‘அரவணைப்பு’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் சமுதாய தொண்டாற்றி வரும் இந்த நூலின் ஆசிரியர், தான் அடிமட்ட நிலையில் இருந்து படிப்படியாக முன்னேறி உன்னதமான இடத்துக்கு வந்தது எப்படி என்பதை அழகாக பதிவு செய்து இருக்கிறார். வாழ்வில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு இந்த நூல் நல்ல உந்துசக்தியாக இருக்கும். நன்றி: தினத்தந்தி, 27/2/19.   இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

விழித்தெழுக என் தேசம்

விழித்தெழுக என் தேசம், சி.ஜெயபாரதன், தாரிணி பதிப்பகம், விலை 250ரூ. அறிவியலாளரும், கவிஞருமான சி.ஜெயபாரதன் (கனடா) எழுதிய கவிதைகளின் தொகுப்பு இந்நூல். “தாரணி எங்கும் நீர், நிலம் நெருப்பு, வாயு, வானமாகிய பஞ்ச பூதங்கள் ஆயுதங்களாய் மாறிக் கோர வடிவத்தில் பேரழிவு செய்யும்” என்ற வரிகள் புவி வெப்பமாதலின் அத்தனை அழிவுகளையும் கோடிட்டுக் காட்டுகிறது. நன்றி: தினத்தந்தி, 27/2/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

இஸ்லாமும் வீரசைவமும்

இஸ்லாமும் வீரசைவமும், டாக்டர் ஏவி.எம்.நசீமுத்தீன், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், விலை 140ரூ. இஸ்லாத்தின் கொள்கைகளும், நடைமுறைகளும் தென்னக மக்களைப் பெரும் மாற்றங்களுக்கும், புதிய சிந்தனைகளுக்கும் கொண்டுசென்றன. இதன் விளைவாக சமய மறுமலர்ச்சியை நோக்கமாகக் கொண்டு வீரசைவம் தோன்றியது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் பசவண்ணர், வீரசைவத்திற்குப் புத்துயிர் அளித்தார். அவர் ஒரு சமூகப் போராளியாக – வீரசைவம் என்ற பதாகையின் கீழ் இந்திய நாட்டின் சமூக அமைப்பில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தினார். பசவண்ணரின் சமூகப்புரட்சிக்குப் பக்கபலமாக அமைந்தது, இஸ்லாமிய மார்க்கத்தின் தனிச்சிறப்பான கொள்கைகளும், நடைமுறைகளும் என்பது ஆராய்ச்சியாளர்களின் […]

Read more

வீரப்பன்

வீரப்பன், நக்கீரன் கோபால், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், விலை 360ரூ. தமிழகம், கர்நாடக அரசுகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த சந்தன கடத்தல் வீரப்பனின் மற்றொரு முகத்தை தெளிவாகக் காட்டும் நூலாக இது வெளியாகி உள்ளது. ‘ காட்டில் மறைந்து வாழ்ந்தபோது வீரப்பன் நடத்திய ஆட்கள் கடத்தல், தன்னைப் பிடிக்க வந்த போலீசாரை கொன்றது ஆகிய பரபரப்பான சம்பவங்கள், நக்கீரன் குழுவினர் உயிரைப் பணயம் வைத்து காட்டுக்குள் சென்று வீரப்பனை முதல் முறையாக சந்தித்து எடுத்த பேட்டிகள், புகைப்படங்கள், வீரப்பன் கூறிய கதைகள் ஆகிய அனைத்தும் நேரடித் […]

Read more

மறைக்கப்பட்ட மருத்துவம்

மறைக்கப்பட்ட மருத்துவம், மருத்துவர் யுவபாரத், ரிதம் நூல் பகிர்வாளர்கள் வெளியீடு, விலை 150ரூ. நோய்கள் குணமடைவதற்கு மருந்து, மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டு வருபவர்கள் நலன் கருதி, மருந்தில்லாமல் எப்படி நோயை குணப்படுத்தவது என்பதை அனைவருக்கும் எளிதாக புரியும் வகையில் எழுதப்பட்ட நூல். மன அழுத்தம், வாழ்வியல் முறை மூலமாகதான் 98 சதவீரம் நோய்கள் வருகிறது. அவற்றை குணப்படுத்த முதலில் உணவு ப் பழக்கத்தை முறையாக எடுத்துக்கொண்டால் அந்த நோய்களில் இருந்து முழுமையாக விடுபட முடியும் என்பதை இந்த நூல் மூலம் உணர முடிகிறது. புதிய […]

Read more

மக்கள் மனதில் எம்.ஜி.ஆர்.

மக்கள் மனதில் எம்.ஜி.ஆர்., பொம்மை சாரதி, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. இது எம்.ஜி.ஆரின் வாழ்க்கைக் குறிப்பு புத்தகம் அல்ல என்று முதலிலேயே சொல்லப்பட்டு இருக்கிறது என்றாலும் இந்தப் புத்தகம் எம்.ஜி.ஆர். பற்றிய அனைத்து விவரங்களையும் கொண்ட தகவல் பெட்டகமாக அமைந்து இருக்கிறது. 1949-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அளித்த முதல் பேட்டி, எம்.ஜி.ஆரின் வம்சாவளி என்ன என்பது பற்றிய வரலாற்று தொடர்பான ஆய்வு, எம்.ஜி,ஆரை ஜெயலலிதா கண்ட பேட்டியின் முழுவிவரம், எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மைக்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள், எம்.ஜி.ஆரின் ஆன்மிக கருத்து […]

Read more
1 6 7 8