மீன்கள் உறங்கும் குளம்

மீன்கள் உறங்கும் குளம், பிருந்தா சாரதி, டிஸ்கவரி புக் பேலஸ், விலை 100ரூ. கவிதை வடிவங்களிலேயே யாரையும் மயக்கக்கூடிய வசிய சக்தி ஹைக்கூவுக்கு இருக்கிறது. யாரையும் படிக்கத் தூண்டும் அந்தச் சின்ன, சிறிய மூன்றடி வடிவம், அழகான படிமங்களால் நுட்பமான வெளியீட்டு முறை, அதன் எளிமை ஆகியவையே ஈர்ப்புக்குக் காரணம். அந்த வகையில் பிருந்தா சாரதி எழுதிய இந்த ஹைக்கூ கவிதைகள் நெஞ்சை அள்ளுகின்றன. மணல் வீடு கட்டி விளையாடுகிறது அகதியின் குழந்தை. ‘இரு நாட்டுக் கொடிகளையும் ஒரே மாதிரி அசைக்கிறது எல்லையில் வீசும் […]

Read more

பாரதி உள்ளம்

பாரதி உள்ளம், வி.ச.வாசுதேவன், சந்தியா பதிப்பகம், விலை 135ரூ. இந்த நூல் மூலம் மகாகவி பாரதியாரை வித்தியாசமான கோணத்தில் பார்க்க முடிகிறது. பாரதியாருக்கும், வள்ளலாருக்கும் உள்ள ஒற்றுமை, பாரதியாருடன் நேரில் பழகிய ராஜாஜி உள்பட 5 பிரமுகர்களின் ஆச்சரியமான கருத்துக்கள், பாரதியாரின் நகைச்சுவை, பேரறிஞர் அண்ணாவின் பாராட்டு என்று பலதரப்பட்ட ருசிகரமான தகவல்கள் இந்த நூலில் தரப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 30/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027275.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

தண்ணீர் வளமும் கண்ணீர்த்துளியும்

தண்ணீர் வளமும் கண்ணீர்த்துளியும்,  ஆர்.நல்லகண்ணு, பத்மா பதிப்பகம், பக்.200, விலை ரூ.190. தமிழகத்தின் நீராதாரம் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். நூலின் முதல் கட்டுரையான தமிழ்நாட்டின் வறட்சியைப் போக்கும் வழி கட்டுரையிலேயே நீராதாரத்தைப் பெருக்க ஏரி, குளங்களை ஆழப்படுத்துவது, மழைக்காலங்களில் ஆறுகளிலிருந்து வீணாகப் போய்ச் சேரும் தண்ணீரைப் பயன்படுத்துவது, காடுகளைப் பாதுகாப்பது, நதிகளை இணைப்பது என பலவழிகள் கூறப்பட்டுள்ளன. இந்தக் கட்டுரையின் விரிவாகவே இந்நூலின் பிறகட்டுரைகள் அமைந்துள்ளன. கங்கை – காவிரி இணைப்பு, சேது கங்கா இணைப்பு, முல்லைப் பெரியாறு பிரச்னை என பல நீராதாரப் […]

Read more

சத்திய வெள்ளம்

சத்திய வெள்ளம், நா.பார்த்தசாரதி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 384, விலை 250ரூ. சில நூல்கள் பொழுது போக்குவதற்கு மட்டும் பயன்படும். சில நூல்கள் நம் சிந்தனையைத் தூண்டி அறிவு பெற உதவும். சில நூல்கள் சில காலத்திற்கு மட்டுமே பொருந்தும். சில நூல்கள் எக்காலத்திற்கும் பொருந்தும். சத்திய வெள்ளம் என்ற இந்நூல் எக்காலத்திற்கும் பயன்படும் நூலாக அமைந்துள்ளது. பல்கலைக்கழக மாணவ மாணவியரின் மன உணர்ச்சிகளையும் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பு குறித்தும் இந்நூல் விளக்குகிறது. இந்நூலின் சில முத்தான கருத்துக்களைப் படித்தாலே நூலின் பெருமை […]

Read more

கவிமணி வரலாற்றாய்வாளர்

கவிமணி வரலாற்றாய்வாளர், அ.க.பெருமாள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 104, விலை 85ரூ. கவிமணியை ஒரு பெருங்கவிஞர் என்ற முறையில் நாடு நன்கு அறியும். இந்நுால், கவிமணி கவிஞர் மட்டுமின்றி, வரலாறு மற்றும் கல்வெட்டு ஆய்வாளராகவும் இருந்திருக்கிறார் என்பதை பல ஆதாரங்களுடன் விளக்குகிறது. நுாலின் முதல் தலைப்பாக கவிமணியின் வாழ்வும் பணியும் பற்றி விளக்குகிறது. கவிமணியின் கவிதைகள், வரலாற்று ஆய்வாளர், கவிமணியும் நாட்டார் வழக்காறுகளும், கவிமணியின் சமகால நோக்கு என்ற தலைப்புகளிலும் பின் இணைப்பாக ஆதார நுால்கள், கவிமணி ஆற்றிய […]

Read more

குண்டலினி – சொல்லப்படாத ஒரு கதை

குண்டலினி – சொல்லப்படாத ஒரு கதை,  ஓம் சுவாமி, ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ், பக்.190, விலை ரூ.199. குண்டலினி தியானம் செய்வதைப் பற்றிய விரிவான நூல். குண்டலினி அறிவியல் ஒரு பண்டைய கல்வியாகும். தகுதியானவர்களுக்கு குரு – சீடர் வழிமுறை மூலம் வாய்வழிப் பாரம்பரியத்தின் ஊடாக அது தலைமுறை தலைமுறையாகச் சொல்லித் தரப்பட்டிருக்கிறது. குண்டலினியை எழச் செய்வது என்பது மனிதன் தன் உள்ளார்ந்த ஆனந்த நிலையை அடைவதுதான். இந்த ஆனந்த நிலையை கோபம், பேராசை, பயம், அகங்காரம் உள்ளிட்ட படலங்கள் மூடியுள்ளன. குண்டலினிப் பயிற்சியால் இந்த […]

Read more

ஏர்வாடியாரின் மனதில் பதிந்த மாண்புறு மனிதர்கள்

ஏர்வாடியாரின் மனதில் பதிந்த மாண்புறு மனிதர்கள், ஆர்.மோகன், வானதி பதிப்பகம், பக். 862, விலை 1000ரூ. சாதனையாளர்களின் பண்புகள் பற்றிய பெட்டகம். ஏர்வாடியார் தன் இதழான கவிதை உறவில் தொடர்ந்து வெளியிட்டு வரும், ‘மனத்தில் பதிந்தவர்கள்’ என்ற கட்டுரைத் தொடர் அவ்விதழின் சிறப்புகளில் ஒன்று. அக்கட்டுரைத் தொடர் பிரபலங்கள் பலரைப் பற்றியது. நடைச் சித்திரமாக மட்டுமல்லாமல், பல துறைகளிலும் சிறக்கப் பணியாற்றுகிற பிரபல பிரமுகர்கள் குறித்த, சின்னஞ்சிறு தகவல் களஞ்சியமாக இந்நுால் தொகுக்கப்பட்டு உள்ளது. பெருந்தகையோர், அரசியல் தலைவர்கள், ஆன்மிகச் சுடர்கள், இலக்கிய ஆளுமைகள், […]

Read more

யார் தமிழர்?

யார் தமிழர்?, ஆர்.பி.வி.எஸ்.மணியன், வர்ஷன் பிரசுரம், பக். 200, விலை 140ரூ. ஆர்யமாம் திராவிடமாம் அத்தனையும் புளுகே’ என துவங்கி, ‘பாரதி பார்வையில் பிராமணர்கள்’ ஈறாக, 13 கட்டுரைகள் பெரும்பாலும் திராவிட இயக்க எதிர்ப்புக் கருத்துக்களை உள்ளடக்கியவையாகும். கடந்த, 1965ல் காங்கிரசை வீழ்த்த ராஜாஜி தான் ஹிந்தியை எதிர்ப்பதாக நாடகம் ஆடினார் -– பக்., 56. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் தேதியை, ராஜ்யோத்சவ நாளாக ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள் கொண்டாடி வருகின்றன. ஆனால், தமிழக அரசு கொண்டாடவில்லை – பக்., […]

Read more

தாவரத் தரகன்

தாவரத் தரகன் (கட்டுரைகள்),  ஜெயபாஸ்கரன், வழுதி வெளியீட்டகம், பக்.200, விலை ரூ.200. தினமணி நாளிதழ், ரெளத்திரம், அமுதசுரபி உள்ளிட்ட பல இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. நீராதாரத்தைப் பாதுகாக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தும் கட்டுரை, வேலிகாத்தானை ஒழிப்பது பற்றிய தாவரத் தரகன். கட்டுரை, தனியார் பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவியர்கள் செல்லும் வாகனங்களைப் போன்று, அரசுப் பள்ளிகளிலும் பள்ளி வாகனங்கள் இருக்க வேண்டும் என்பதைச் சொல்லும் கட்டுரை, தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் தேர்தலுக்காகச் செய்யும் செலவுகளைப் பற்றிச் சொல்லும் கட்டுரை என பலவிதமான விஷயங்களை […]

Read more

வீரப்பன்

வீரப்பன், (16000 சதுர கி.மீ. காடுகளை ஆண்ட காட்டு ராஜாவின் கதை), நக்கீரன் கோபால், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், பக். 456, விலை 360ரூ. கடந்த, 1988ம் ஆண்டு, வீரப்பன் குறித்த செய்திகள் பத்திரிகையில் வெளிவரத் துவங்கின. 1991ல் கர்நாடக மாநில, டி.எப்.ஓ.,வை கொடூரமாக கொலை செய்தது; 1993ல் வைத்த கண்ணிவெடியில், தமிழக கர்நாடக அதிரடி படை வீரர்கள், 22 பேரை பலியாக செய்தது உள்ளிட்ட சம்பவங்கள், இந்தியாவையே அதிர வைத்தன. யார் இந்த வீரப்பன் என்பதை அறியும் ஆர்வம், மக்களிடம் அதிகரித்தது. இங்ஙனம் ஆரம்பிக்கிறது, […]

Read more
1 5 6 7 8