நாக்கை நீட்டு

நாக்கை நீட்டு, மா.ஜியான், தமிழில் எத்திராஜ் அகிலன், அடையாளம் பதிப்பகம், விலை 90ரூ. உலர்ந்த எலும்புகளின் கடைசி நினைவு தான் எழுதிய படைப்புகள் காரணமாக சீன அரசால் வேட்டையாடப்பட்டு தற்போது லண்டனில் வசிக்கும் 65 வயது எழுத்தாளர் மா ஜியானின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. ஓவியக் கலைஞருமான மா ஜியானின் ஓவியங்கள், 1983-ல் ஆன்மிக மாசுபாட்டை ஏற்படுத்துவதாகக் குற்றம்சாட்டப்பட்டு, கிழித்தெறியப்பட்டு அழிக்கப்பட்டதோடு அவர் சீன அரசால் கைதும் செய்யப்பட்டார். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், அவரது தனிப்பட்ட வாழ்விலும் புயல் வீசியது. விவாகரத்துபெற்ற அவரது […]

Read more

கங்காபுரம்

கங்காபுரம், அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை 450ரூ. மதுராந்தகனின் அகவுலகம் ஜோ டி குருஸ்ராஜராஜனுக்கு மகனாய்ப் பிறந்து, அவனது ஒவ்வொரு சிகரச் சாதனைகளுக்கும் காரணமாய் இருந்த மதுராந்தகன் பின்னாளில் தாமதமாகவே ராஜேந்திரன் என மகுடம் சூட்டப்பட்டான். கங்கையும், கடாரமும் கொண்ட இச்சோழ இளவல், தன் முன்னோர்கள் உருவாக்கிய சோழ அரசின் விரிவாக்கத்துக்கும் பாதுகாப்புக்கும் பாடுபட்டதோடு மட்டுமல்லாது, நிர்வாகத் திறத்தால் மக்கள் மனங்களிலும் நீங்கா இடம்பெற்றிருந்தான். சோழர்களின் நீர் மேலாண்மை இன்றும் வியக்கவைக்கிறதே! ராஜேந்திரனின் ஆட்சிக்காலமே தமிழர்களின் பொற்காலம் என்பது யாராலும் என்றும் அழித்துவிட முடியாத […]

Read more

வாட் இஸ் பரதநாட்டியம்?

வாட் இஸ் பரதநாட்டியம்?(ஆங்கிலம்), வித்யா பவானி சுரேஷ், ஸ்கந்தா பப்பிளகேஷன்ஸ், விலை 1330ரூ. தலைப்பு பரதநாட்டியம் கற்றுத்தரும் புத்தகம்போல் இருந்தாலும், பரத நாட்டியக் கலைஞரும் இசை ஆராய்ச்சியாளருமான வித்யா பவானி சுரேஷ், பரதக் கலையோடு வாழ்க்கையில் முன்னேறும் கலையையும் கற்றுத்தரும் வகையில் எழுதியிருக்கும் நூல் இது. “ஒருநாள் நான் லிஃப்டில் சென்றபோது, அவசர அவசரமாக தலைமுடியில் இருந்து ஈரம் சொட்ட ஓடிவந்தார் ஒரு பெண்மணி. வலது கையால் தலையைக் கோதி காய வைத்தபடியே, அரக்கப்பரக்க அலுவலகத்துக்குச் சென்ற அவரைப் பார்த்த எனக்கு சங்கடமாக இருந்தது. […]

Read more

மாற்றுத்திறனாளிகள் வாழ்வியல் சூழல்

மாற்றுத்திறனாளிகள் வாழ்வியல் சூழல், கோ.மாலினி சீதா, வாசகன் பதிப்பகம், விலை 100ரூ. உடலாலும் மனதாலும் சவால் விடப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் நிலை புராதன காலம் முதல் இன்றுவரை எப்படியெல்லாம் உயர்வு பெற்றிருக்கிறது என்பதைச் சொல்லும் ஆய்வு ரீதியான நூல். உடல் சோதனையையும், மன வேதனையும் கடந்து சாதனை படைத்தவர்கள் பற்றிப் படிக்கும்போது மனதுக்குள் இனம்புரியாத நெகிழ்வு ஏற்படுவது நிஜம். நன்றி: குமுதம், 13/3/2019. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

குறள் இனிது! கதை இனிது!

குறள் இனிது! கதை இனிது!. இரா.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்., குமரன் பதிப்பகம், விலை 200ரூ. தேர்ந்தெடுத்த நூற்றியெட்டு குறட்பாக்களுக்கு பொருத்தமான குட்டிக் குட்டி நன்னெறிக் கதைகள். ராமாயணம், மகாபாரதம் வரலாற்று நிகழ்வுகள் என்று பலவற்றோடும் தொடர்புடைய கதைகளைச் சொல்லியிருப்பது திருக்குறளை ஒரு புதிய கோணத்தில் அழகுபடுத்தியிருப்பதோடு, படிப்போரின் ஆர்வத்தையும் தூண்டுகிறது. குட்டீஸை நிச்சயம் ஈர்க்கும். நன்றி: குமுதம், 13/3/2019.   இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

மாமியார் என்னும் சிற்பி

மாமியார் என்னும் சிற்பி, முனைவர் ப. கலைவாணி, அபிசான் பதிப்பகம், விலை 60ரூ. உலகம் முழுக்க, மாமியார் மருமகள் பிரச்னை இல்லாத குடும்பமே இல்லை என்று சொல்லலாம். அதற்குக் காரணம், புகுந்த வீட்டுப் பழக்கங்களை பழக்க மாமியார் செய்யும் முயற்சிகள் மருமகளால் கடுமையாகப் பார்க்கப்படுவதும், பிறந்த வீட்டுப் பழக்கங்களை மறக்க முடியாமல் தொடர நினைக்கும் மருமகளின் செயல்கள் மாமியாரால் அந்நியமாக நோக்கப்படுவதும்தான். இந்த நிலைமாறி, தன்னைச் செதுக்கும் தலைமைச் சிற்பியே மாமியார் என்பதை உணர்ந்து ஒவ்வொரு மருமகளும் சிலையாக மிளிர்ந்திடவும், உறவுகள் சிதையாமல் இருக்கவும் […]

Read more

பாரதியார் பதில்கள் நூறு

பாரதியார் பதில்கள் நூறு, ஓளவை அருள், ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம். பாரதியாரின் வாழ்க்கை, வரலாறு முதல் அவரது கவித் திறன், இலக்கிய வல்லமை, தேசப்பற்று, பாரதியாரைப் பற்றி பல்வேறு அறிஞர்களின் கருத்து என்று மகாகவியைப் பற்றிய அத்தனை விஷயங்களும் எளிமையான வினா, விடை பாணியில் மாணவர்களுக்குச் சொல்லித் தருவதுபோல் தொகுக்கப்பட்டுள்ளது. புரட்சிக் கவியின் மொத்தப் படைப்புகளையும் புரட்டிய திருப்தி கிடைக்கிறது. நன்றி: குமுதம், 13/3/2019. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

முள்ளி வாய்க்கால் முதல் இலாசுஏஞ்சல்சு முடிய

முள்ளி வாய்க்கால் முதல் இலாசுஏஞ்சல்சு முடிய (புதினம்),  கருவூர் கன்னல், குறள்வீடு, பக்.200, விலை ரூ.150. ஒட்டக்கூத்தன் தான் படித்த கல்லூரியில் துணைமுதல்வராகவும், ஆங்கிலத்துறைத் தலைவராகவும் இருந்த கிருட்டிணன் நம்பூதிரியுடன் நட்பு கொள்கிறான். அது கடைசி வரை நீடிக்கிறது. கரூவூர் கன்னல் எழுதிய "முள்ளிவாய்க்கால் முதல் இலாசுஏஞ்சல்சு முடிய' புதினம் கிருட்டிணன் நம்பூதிரியை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. கேரளாவில் இடதுசாரி இயக்கத்தில் ஈடுபட்டிருந்த பெற்றோரை விமான விபத்தொன்றில் கிருட்டிணன் நம்பூதிரி இழந்துவிடுகிறார். நண்பரின் சிபாரிசின் பேரில் அமெரிக்காவுக்குப் பயணமாகிறார். கூடவே ஒட்டக்கூத்தனும் செல்கிறான். கிருட்டிணன்நம்பூதிரி இலாசு […]

Read more

மகான் பாம்பன் சுவாமிகள்

மகான் பாம்பன் சுவாமிகள், முனைவர் ஆ. சந்திரசேகர், செம்மூதாய் பதிப்பகம், பக். 160, விலை 50ரூ. பாம்பன் சுவாமிகளின் பாடல்கள் அனைத்தும் மந்திரங்கள். அவருடைய பல பாடல்களில், சில பாடல்களையாவது நித்திய பாராயணம் செய்தால், நமக்கு, அளவு கடந்த பலன்கள் கிட்டும். பகைக்கடிதல், குமாரஸ்தவம், சண்முகக் கவசம் ஆகிய இந்த மூன்று பாடல்களுக்கும், சிறப்பாக விரிவுரை எழுதியுள்ளார் ஆசிரியர். குமாரஸ்தவம் – இம்மைத் துன்பம், பிறவித் துன்பம் எனும் வெப்பங்களைப் போக்கும். பக்தி இலக்கியம். – எஸ்.குரு. நன்றி: தினமலர், 3/3/2019. இந்தப் புத்தகத்தை […]

Read more

காஞ்சியன்பன் கவிதைகள்

காஞ்சியன்பன் கவிதைகள், வழக்கறிஞர் ப.திருவேங்கடம், ஆனந்தா பதிப்பகம், பக். 120, விலை 60ரூ. இன்றைய காலகட்டத்தில் பெரும் பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது, வேலையில்லாத் திண்டாட்டம். இந்நுாலில், ‘வேலை தேடும் வேலையைச் செய்பவர்கள்… கரிகூட திரும்ப எரியும்! வாலிபத்திலேயே வாழ்விழந்த நாங்கள் வாழ்வது யாருக்காக?’ என்ற கவிதை, மனித வாழ்க்கையின் மையப் பிரச்னையை கனத்த நெஞ்சோடு சொல்லிச் செல்கிறது. புதிய வெளிச்சங்களை சமூகத்திற்கு தருபவையாக, காஞ்சியன்பனின் கவிதைகள் திகழ்கின்றன. – மாசிலா இராஜகுரு நன்றி: தினமலர், 3/3/2019. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more
1 3 4 5 6 7 8