பரிசுக் கதைகள் பதினெட்டு

பரிசுக் கதைகள் பதினெட்டு,  சோ.சுப்புராஜ், சக்தி வேலம்மாள் பதிப்பகம், பக்.230, விலை ரூ.150. வார,மாத இதழ்களும், இணைய இதழ்களும், தமிழ் அமைப்புகளும் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்ற 18 சிறுகதைகளின் தொகுப்பு. எண்பதுகளின் மத்தியிலிருந்து எழுதிக் கொண்டிருக்கும் நூலாசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுதி இது. குடிக்க ஒரு வாய் கூட தண்ணீர் கூட தர யோசிக்கும் வறண்ட கிணறுகளைக் கொண்டது அந்த கிராமம். வயதான கணவர் தொலைதூரம் சைக்கிளில் சென்று கொண்டு வந்த தண்ணீரை, பஞ்சம் பிழைக்க வந்த கிணறு வெட்டும் சங்கையாவின் […]

Read more

திருமாலின் பெயர்கள் 1000

திருமாலின் பெயர்கள் 1000, வரத நம்பி இளநகர் காஞ்சி நாதன், ஜெயதாரிணி அறக்கட்டளை, விலை 330ரூ. (குறுந்தகடுகள் 2 இலவசம்) தமிழில் முதல்முறையாக ராகமாலிகை வடிவில், இனிமையாக கேட்பதுடன், விளக்கத்துடன் இருப்பதால், விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் பெருமையை மேலும் அறியலாம். அம்புப்படுக்கையில் இருந்த பீஷ்மர், தன் முன் கண்ணன் நிற்க, அருளிய இந்த, 1,000 பேர் நாமம் மிக அரியதாக போற்றப்படுகிறது. அதிலும் இசையுடன் கூடிய, 1,000 பேர் பெருமை பேசுவது இந்த நுாலின் சிறப்பாகும். சோகமற்ற ஆனந்த வடிவினன்: நினைத்ததும் சோகத்தைப் பொசுக்கிடுவோன், […]

Read more

ஒளி உன்னால் அறியப்படுகிறது

ஒளி உன்னால் அறியப்படுகிறது, பழநிபாரதி, குமரன் பதிப்பகம், பக். 104, விலை 80ரூ. இலக்கண நடையில் எழுதி, இக்கால இலக்கியத்திற்கு சிறப்பு சேர்க்கும், பழநிபாரதியின் கவிதைகள் எண்ணற்றவை. ‘இந்த வைகறை உன்னிடமிருந்து துயிலெழுகிறது; ஒளி உன்னால் அறியப்படுகிறது; முதல் மலர்களின் நறுமணத்தை நுகர்ந்தபடி விடைபெற்ற நட்சத்திரங்களில் ஒன்று கடைசியாக உன்னைத் திரும்பிப் பார்க்கிறது!’ என்ற கவிதை வரிகள், நம்மை நெகிழ வைப்பதாக உள்ளன. இந்நுால், இன்றைய இளைய தலைமுறையினருக்கு பயனுள்ளதாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. – மாசிலா இராஜகுரு நன்றி: தினமலர்,17/3/19, இந்தப் […]

Read more

முக்காலம் தொடும் முத்தரையர் வரலாறு

முக்காலம் தொடும் முத்தரையர் வரலாறு, அ.சவரிமுத்து, சங்கர் பதிப்பகம், பக். 240, விலை 225ரூ.   முத்தரையர் என்ற பழம்பெரும் சமூகத்தின் தொடக்கக் காலம் முதல் இன்று வரை, பல்வேறு ஆய்வுகள் செய்து எழுதப்பட்டுள்ளது, முக்காலம் தொடும் முத்தரையர் வரலாறு எனும் இந்நுால். முத்தரையர் என்பதற்கு சேர, சோழ, பாண்டியரை அடக்கி, ஓர் கொடையின் கீழ் ஆண்ட அரசர் முத்தரையர் என்றும், மூன்று + தரையர் = முத்தரையர் என்றும் விளக்கம் கூறுவர். நுாலின் முகப்பிலேயே, இந்த நுால் எந்த சமுதாயத்திற்கும் எதிராக எழுந்த […]

Read more

சபாஷ் சாணக்கியா

சபாஷ் சாணக்கியா, சோம வீரப்பன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.160 வணிக வீதி’ இணைப்பிதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. திருக்குறளின் மேலாண்மை வழிகாட்டுதல்கள் குறித்து சோம வீரப்பன் எழுதிய ‘குறள் இனிது- சிங்கத்துடன் நடப்பது எப்படி?’ வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து, அர்த்தசாஸ்திரம் இயற்றிய சாணக்கியரின் மேலாண்மைக் கருத்துகளை இன்றைய வணிகச் சூழலில் பின்பற்றுவது எப்படி என்று தனக்கே உரிய தனிச்சுவை நடையில் ‘சபாஷ் சாணக்கியா’ தொடரை எழுதிக்கொண்டிருக்கிறார் சோம வீரப்பன். அத்தொடரில் வெளியான முதல் 50 கட்டுரைகளின் […]

Read more

இராகவம் தொகுதி 2

இராகவம் தொகுதி 2, தொகுப்பும் பதிப்பும் கா.அய்யப்பன், காவ்யா வெளியீடு, விலை 900ரூ. உவேசா வழித்தடத்தில் நாட்டுடமையான தமிழறிஞர்களின் படைப்புகளை முழுமையாகத் தொகுத்து வெளியிட்டுவரும் காவ்யா பதிப்பகம், ரா.இராகவையங்காரின் படைப்புகளை ‘இராகவம்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. சங்கத் தமிழ் ஆய்வின் முன்னோடிகளான உ.வே.சாமிநாதையர், ச.வையாபுரிப் பிள்ளை இருவராலும் பாராட்டப்பட்டவர் ரா.இராகவையங்கார். ‘இராகவம்’ இரண்டாம் பாகத்தில் அவர் எழுதிய குறுந்தொகை உரைவிளக்கமும் பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆராய்ச்சி உரைகளும் இடம்பெற்றுள்ளன. 1946-1951 காலகட்டத்தில் வெளியான முதல் பதிப்புகளின் அடிப்படையில் இத்தொகுப்பைத் தொகுத்திருக்கிறார் எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப […]

Read more

சலூன்

சலூன், க.வீரபாண்டியன், யாவரும் பதிப்பகம், விலை 140ரூ. முடி திருத்துவதற்காக வெளிநாடொன்றில் கடை தேடி அலைவதில் தொடங்கி பால்ய காலத்தில் சந்தித்த நாவிதர்களின் வாழ்க்கையைத் திரும்பிப்பார்ப்பதாக அமைந்திருக்கிறது க.வீரபாண்டியனின் ‘சலூன்’ நாவல். நான்கு வேறு வேறு இடங்களில் நாயகனுக்கு அறிமுகமான நாவிதர்கள், அவர்களின் கடந்தகால வாழ்க்கை, முடி திருத்துவதில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் நிபுணத்துவம், அன்றாடத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என விவரித்துச் செல்கிறது. நவீன நுகர்வுக் கலாச்சாரத்தில் பெரும் வியாபாரமாகிப்போன மாடர்ன் சலூன்களுக்கும், வாழ்க்கைப்பாட்டுக்காகத் தொழில் செய்பவர்களுக்கும் இடையேயான போட்டியும், சமூகக் கண்ணோட்டங்களும் நாவலில் […]

Read more

சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர்

சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர், நாகூர் ரூமி, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 175ரூ. நமக்கு நாமே தடை தி இந்து குழுமத்தின் ‘காமதேனு’ இணையதளத்தில் வெளியான 30 கட்டுரைகளின் தொகுப்பு. வெற்றிக்கு மட்டுமல்ல; தோல்விக்கும்கூட மனமே காரணமாக இருக்கிறது. தாழ்வுணர்ச்சிகளால், தவறான அபிப்ராயங்களால் உருவாக்கிக்கொள்ளும் மனத் தடைகள் வெற்றிக்கு எப்படி தடைக்கற்களாக மாறுகின்றன? அந்தத் தடைகளை உடைத்து வெளியே வருவது எப்படி என்பதை சாதனையாளர்களின் சரித்திரங்களை உதாரணம்காட்டி நம்பிக்கையூட்டுகிறார் கவிஞரும் எழுத்தாளருமான நாகூர் ரூமி. நன்றி: தமிழ் இந்து,16/3/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

ஒரு துணை வேந்தரின் கதை

ஒரு துணை வேந்தரின் கதை, சே.சாதிக், யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், விலை 400ரூ. சென்னைப் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராகப் பணியாற்றிய சே.சாதிக், தனது விரிவான வரலாற்றை ஏற்கனவே இரண்டு தொகுதிகளாக வெளியிட்டு இருக்கிறார். தற்போது மூன்றாம் பாகமாக வெளியாகி உள்ள இந்த நூலில், அவர் மேல் படிப்புக்காக சென்னையில் இருந்து கனடா நாட்டுக்கு சென்றது முதல் நடைபெற்ற நிகழ்வுகள் சொல்லப்பட்டுள்ளன. கனடாவில் அவரது வாழ்க்கை, அவ்வப்போது விமான நிலையங்களில் சந்தித்த அனுபவங்கள், சென்னை வந்து பதவி ஏற்றது. பல தடைகளையும் தாண்டி வெற்றி பெற்ற […]

Read more

ஜீனியஸ்

ஜீனியஸ், பி.வி.பட்டாபிராம், யுனீக் மீடியா இன்டக்ரேட்டர்ஸ், விலை 175ரூ. தன்னம்பிக்கையை வளர்க்க உதவும் நூல் வரிசையில் இந்தப் புத்தகம் சிறப்பிடம் பெறுகிறது. வாழ்க்கையில் வெற்றி பெற தன்னம்பிக்கையை எவ்வாறு வளர்த்துக் கொள்வது என்பது பல விதமான பயிற்சி விளக்கங்களாகவும், சிலரது வாழ்வில் நடைபெற்ற அனுபவங்கள் பற்றிய தகவல்களாகவும் இதில் இடம்பெற்றுள்ளன. ஆங்காங்கே கொடுக்கப்பட்டுள்ள பெட்டிச் செய்திகளில் நல்ல விஷயங்கள் அடங்கி இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 13/3/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more
1 2 3 4 5 8