சுற்றுச்சூழல் சிதறல்கள்

சுற்றுச்சூழல் சிதறல்கள், ஜே.ஜோபிரகாஷ், ரேவதி பதிப்பகம், பக். 446, விலை 420ரூ. இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ, நாம் இயற்கையை நேசிக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு எதிரான அணுகுமுறைகளை குறைக்க வேண்டும். மனித குலம் மாற வேண்டும். ஒரு நாட்டின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கும், மனித சமுதாய நலனுக்கும் மிகையான உயிரினப் பன்மயம் கொண்ட ஒரு சூழ்நிலை அவசியமாகிறது. மனிதர்களின் செயலால் ஏற்படும் உயிரினப் பன்மயத்தின் இழப்பானது, ஆபத்தானப் பொருளாதார மற்றும் சமுதாய சீர்கேட்டுக்கு அழைத்துச் சென்றுவிடும் என்பதை, பல்வேறு தரவுகள் மூலம் எச்சரிக்கிறார் நுாலாசிரியர். […]

Read more

ஆழ்வார்களின் சிந்தனைகள் 2 பகுதிகள்

ஆழ்வார்களின் சிந்தனைகள் 2 பகுதிகள், பேரா.ஜய.குமாரபிள்ளை, சங்கர் பதிப்பகம், பக். 368+624, விலை 300ரூ+550ரூ. கி.பி., மூன்றாம் நுாற்றாண்டிற்குப் பின், தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பிலிருந்த களப்பிரர்களாலும், பல்லவர்களாலும், சமணம் மற்றும் பவுத்த சமயங்கள் பரவியதுடன், அவர்களின் பிராகிருத மொழி இங்கு ஆட்சி மொழியாக இருந்ததால், தமிழ்மொழியும், தமிழரின் சமயங்கள், இல்லற மாண்புகள், அகப்பொருள் இலக்கிய மரபுகள், இசை, கூத்து முதலியன சிதைந்தனவென்று அறிஞர்கள் கூறுவர். அங்ஙனம் பிற மதங்களின் கட்டுப்பாட்டில் சிக்கியிருந்த தமிழகத்தை மீட்டெடுக்கவே, சைவ -வைணவப் பெரியோர்கள், பக்தி இயக்கத்தைத் தோற்றுவித்தனர் என்பர். […]

Read more

ஆன்மிக அலைகளும் அனுபவச் சுழல்களும்

ஆன்மிக அலைகளும் அனுபவச் சுழல்களும், கவியேோகி வேதம், மகான் ஸ்ரீலஹரிபாபா பதிப்பகம், விலை 140ரூ. அற்புதக் கதம்ப மலர்களாக அற்புதக் கருத்துகள் அடங்கிய சிறுகதை நுால். ஆசிரியர் ஆன்மிக வேட்கையை பிரதிபலிப்பவை. நாயுருவி என்ற கதையில், சுகுமார், செல்லாயி வாழ்க்கை மாற்றங்கள், கடைசியில் இருவரும் அல்லல்பட்டு, கிராமத்தில் ஊழலற்ற சேவை செய்யும் போது, பழைய காதலர்கள் மீண்டும் இணைவதை ஆசிரியர் கூறுகிறார். வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணம், வசதி வாய்ந்த வாழ்க்கை மட்டும் மன நிம்மதி தராது என்பதை வெளிப்படுத்தும், அனுபவச் சுழல்கள் பலவிதமாக பல […]

Read more

தணிகாசல புராணம்

தணிகாசல புராணம், டாக்டர் உ.வே.சாமிநாகையர், டாக்டர். உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், பக். 138, விலை 100ரூ. டாக்டர் உ.வே.சா., 1939ல் வெளியிட்ட இந்தநுால், 80 ஆண்டுகளுக்குப் பின், தற்போது வெளியிடப்பட்டுள்ளது. திருத்தணியின் அழகையும், சிறப்பையும், எங்கும் எழுந்தருளியுள்ள முருகனின் பெருமைகளையும், மூர்த்தி, தலம், தீர்த்தம் சிறப்புகளையும் வெகு விளக்கமாகக் கூறும் இந்நுாலின் கவிச்சுவை சொல்லி மாளாது. உ.வே.சா., முகவுரையே கந்தப்பையரின் புலமையை வெகுவாக பாராட்டியுள்ளது, இப்புராணத்தைப் படிக்கும் ஆவலைத் துாண்டுகிறது. இப்புராணத்துடன் தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர் இயற்றிய திருத்தணிகைத் திருவித்தமும், உ.வே.சா., எழுதிய குறிப்புரையும் […]

Read more

கர்மா தர்மா

கர்மா தர்மா, பேரா.க.மணி, அபயம் பப்ளிகேஷன்ஸ், பக். 64, விலை 100ரூ. ‘பலனை எதிர்பார்க்காதே, கடமையை செய்’ என்கிறது பகவத் கீதை. ‘ஆனால், நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், அதாவது ஒவ்வொரு கர்மாவும், நம் தர்மத்தின் பலனாலேயே விளைகிறது. அதேபோல் இந்த கர்மாக்களே, நமக்கு தர்மத்தையும் ஏற்படுத்துகிறது’ என்கிறார், நுாலாசிரியர். தர்மத்துக்கு புறம்பான கர்மாவும், தர்மத்துக்கு உட்பட்ட கர்மாவும், உரிய பலனை தரும். இது தான், பாவ, புண்ணியம் என அழைக்கப்படுகிறது. அதனால், நல்ல புண்ணிய பலன்கள் கிடைக்கும் வகையில், நம்முடைய ஒவ்வொரு கர்மாவும் […]

Read more

மேடையிலே வீசிய பூங்காற்று

மேடையிலே வீசிய பூங்காற்று, இரா.இராமமூர்த்தி, வசந்த ஸ்ரீ பதிப்பகம், பக். 142, விலை 140ரூ. உலக உயிர்கள் உய்யத் தாமே ஆலகால நஞ்சை உண்ட சிவபெருமானின் அழகிய தோற்றத்தை நுவல்கிறது, ‘கண்ணி கார்நறுங் கொன்றை!’ மேலும், ‘சுடுசொல் சொல்லேல்’ எனும் சிறுகதையில், பிறரை மட்டந்தட்டி பேசுவதிலும் நயத்தக்க நாகரிகம் வேண்டும் என்பதை, அரசியல் மேடைகளிலும், பட்டிமன்றங்களிலும் அலங்கரிக்கும் பேச்சாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்கிறார் நுாலாசிரியர். ‘சுதந்திர மாண்பு, பட்டியலும் பாட்டியலும், எதிர்பாராத நிகழ்ச்சி, மெய்யும் பொய்யும், வாழை இலை, திருட்டுச் சாப்பாடு, கோட்டில் […]

Read more

புண்ணியம் சேர்க்கும் புனித யாத்திரை

புண்ணியம் சேர்க்கும் புனித யாத்திரை, பத்மாவதி குமரன், கிரி டிரேடிங் ஏஜென்ஸி, பக். 168, விலை 250ரூ. பக்தி இலக்கியங்கள் என்பது வேறு; ஆனால், புனிதத் தலங்களைத் தேடிச் சென்று வாழ்வின் பயனைத் துய்க்கும் பலரில், நுாலாசிரியர் பத்மாவதி குமரனும் ஒருவர். மிகப்பெரும் பாரம்பரியத்தைச் சேர்ந்த இவர் குழந்தையாக இருக்கும் போது, ரமணர் கையில் தவழ்ந்த அரிய பேறு பெற்றவர். இந்தியாவில் உள்ள மிகப் புகழ் மிக்க கோவில்கள் மட்டுமின்றி, மலேஷியா, மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் உள்ள கோவில்களின் சிறப்பை வண்ணப் படங்களுடன், வழு […]

Read more

கம்பரச ஆராய்ச்சி

கம்பரச ஆராய்ச்சி, கு. பாலசந்திர முதலியார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 160, விலை 150ரூ. கடந்த, 1949ல் அண்ணாதுரை எழுதிய, ‘கம்பரசம்’ என்ற நுாலுக்கு மறுப்பு நுாலாக வெளிவந்த இந்த நுால் ஒரு மறுபதிப்பாகும். எதிர்வினைத் திறனாய்வு செய்ய சரியான சான்றுகளும், தரவுகளும் வேண்டும். அப்போது தான், ஒருவர் கூறியுள்ள கருத்திற்கு மறுப்பான கருத்தை முன்வைக்க முடியும். இந்த நுால், அண்ணாதுரை எழுதிய கம்பரசத்தை அடி முதல், நுனி வரை ஆழ்ந்து படித்து ஆராய்ந்து, தம் கருத்தை நுாலாசிரியர் தடை விடைகளால் பதிவு […]

Read more

நாம் திராவிடர்

நாம் திராவிடர், முனைவர் ப.கமலக்கண்ணன், காவ்யா, பக்.408, விலை 400ரூ. கொள்கையில் விடாப்பிடியாக இருந்து சாதனைகள் பல செய்தவர் ஈவெ.ரா., அதற்காக எத்தகைய தியாகங்களையும் செய்யத் தயங்காதவர். நுால் முழுவதும் அவரது எண்ணம், கொள்கை, விளக்கம் பெறுகின்றன. இந்த நுாலில், ‘மொழி பற்றிய தமது எண்ணங்களில், தமிழ் மொழியைச் செம்மை செய்து, உலக அரங்கில் உயர்ந்த நிலைக்குக் கொண்டு வரவேண்டும் (பக். 53) என்கிறார். ஆனால் ‘காட்டுமிராண்டி’ என்ற அவரது கருத்தையும், தாய்மொழி குறித்த அவரது புலமையையும் இதில் எழுதியிருந்தால், ‘திராவிடக் கண்ணோட்டம்’ எது […]

Read more

குந்தியின் குருசேத்திரம்

குந்தியின் குருசேத்திரம், விஜயராஜ், பூம்புகார், பக். 352, விலை 275ரூ. குந்தியின் தந்தை பெயர் சூரசேனன், சகோதரன் வசுதேவன். கிருஷ்ணனும், பலராமனும் அண்ணன் மகன்கள். குந்தியின் தந்தை சூரசேனனின் அத்தை மகன் குந்திபோஜன். அவனிடம் வளர்ப்பு மகளாக வளர்ந்ததால், இவள் குந்தி எனப் பெயர் பெற்றாள். பிறந்தது ஓர் இடம்; வளர்ந்தது வேறிடம். இல்லற வாழ்க்கையில் ஈடுபட இயலாத பாண்டுவை கணவனாகக் கொண்டாள். அரண்மனை வாழ்க்கையாவது கிடைக்குமா என்றால், அதுவும் கிடைக்கவில்லை. அவளை அழைத்துக் கொண்டு வனத்திற்குப் போய் விட்டான் பாண்டு. மந்திரத்தின் உதவியால் […]

Read more
1 2 3 4 8