வைணவம் வளர்த்த மகான்கள்

வைணவம் வளர்த்த மகான்கள், ஆர்.வி.பதி, நிவேதா பதிப்பகம், விலை 150ரூ. வைணவம் வளர்த்தவர் என்றதும் பன்னிரு ஆழ்வார்களையே நினைப்போம். ஆனால், வைணவத்தை எங்கும் பரப்பிய, 32 மகான்களை, இந்த நுாலில் மிகச் சுருக்கமாக ஆசிரியர் தந்துள்ளார். வைணவ குரு மரபில் முதல்வர் நாராயணர், இரண்டாம் ஆச்சார்யர் பெரிய பிராட்டியார், பின், விஷ்வக்சேனர் இவரே நம்மாழ்வாராக அவதரித்து நான்கு வேதங்களையும் திருவாய் மொழியாகப் பாடியவர். பெருமாள் கோவில்கள் தலையில் சாத்தப்படும் ஸ்ரீசடாரி, நம்மாழ்வார் சடகோபன் பெயரால் வழங்கப்படும் பெருமாள் பாதங்கள். பல நுாற்றாண்டுகளுக்கு முன், ‘திருமலை […]

Read more

தண்டோராக்காரர்கள்

தண்டோராக்காரர்கள், சு.தியடோர் பாஸ்கரன், தமிழில்: அ.மங்கை, அகநி வெளியீடு, விலை: ரூ.220 நம்பினார். காங்கிரஸ் ஆதரவாளரான அவர், சினிமா நேரடிப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை ஆதரித்தார். இராஜகோபாலாச்சாரி, சத்தியமூர்த்தி, டி.பிரகாசம் ஆகிய தலைவர்களோடும் நாராயணன் தொடர்புகொண்டிருந்தார். தனது வீட்டில் மிகுந்த விளம்பரத்தோடு அந்நியத் துணி எரிப்பை நடத்திவிட்டு, அவர் கதர் அணியத் தொடங்கினார். ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன் தலைவர் என்ற முறையில், அவர் காங்கிரஸ் நிகழ்வுகள் பலவற்றைக் குறித்த செய்திச்சுருள், குறும்படங்களையும் தயாரித்திருந்தார். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் நாட்டுத் திரைப்பட மையங்களுக்குப் பயணித்தார். ‘தி இந்து’ […]

Read more

மனசு போல வாழ்க்கை 2.0

மனசு போல வாழ்க்கை 2.0, ஆர்.கார்த்திகேயன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.100 மனம் குறித்த அலசல் கட்டுரைகள், கேள்வி-பதில் பகுதியின் தொகுப்பே இந்தப் புத்தகம். இதைப் படிக்கும் வாசகருக்குத் தன்னுடைய பயம், பதற்றம், மன அழுத்தம், கோபம், வருத்தம், ஏமாற்றம், குற்றவுணர்வு போன்ற மனம் செய்யும் ஆர்ப்பாட்டங்களை ஆற்றுப்படுத்தும் பக்குவம் வாய்க்கும். மனத்தை ஆளத் தெரிந்த எவருக்கும் எந்தவொரு சவாலையும் எளிதாக ஆள முடியும். அதற்கு இந்நூல் உதவும். நன்றி: தமிழ் இந்து, 1/2/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

நிலமடந்தைக்கு

நிலமடந்தைக்கு, நரோலா, தடாகம் வெளியீடு, விலை: ரூ.100 ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலை நிலவுரிமை பெறுவதில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து, அதற்காகத் தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த தம்பதியர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன். இளமைக் காலம் தொடங்கி இறால் பண்ணைகளுக்கு எதிரான போராட்டம் வரை என அவர்களுடைய எழுபதாண்டு கால சமூக வாழ்க்கையைச் சுருக்கமாக அறிந்துகொள்வதற்கான புத்தகம் இது. நன்றி: தமிழ் இந்து, 20/1/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஆக்சிஜன் மேனிஃபெஸ்டோ

ஆக்சிஜன் மேனிஃபெஸ்டோ, அதுல்ய மிஸ்ரா, ரூபா வெளியீடு, விலை: ரூ.295 சேலத்தில் ஒரு நடுத்தரவர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் போஸ், ஐஏஸ் தேர்வில் வெற்றி பெற்று மணிப்பூர் மாநிலத்தில் பணியாற்றுகிறார். மணிப்பூர்-மியான்மர் எல்லைப் பகுதியில் மோரே என்ற சிற்றூரில் அன்றைய பர்மாவிலிருந்து வந்து குடியேறிய தமிழ் அகதிகள் பெருமளவில் வசித்துவருகின்றனர். திருமணமாகாத ‘தாத்தா’ என்று அழைக்கப்பட்டுவரும் தமிழர் ஒருவர், தொடர்ந்து செடிகளை வளர்த்து பொட்டல் காடுகளை உருமாற்றுகிறார். இவரைச் சந்தித்த பிறகு அந்த அதிகாரியிடம் ஏற்பட்ட மனமாற்றம் எத்தகைய மாற்றத்தை உருவாக்கியது என்பதை நாவலாக்கியிருக்கிறார் தமிழக ஐஏஎஸ் அதிகாரியான […]

Read more

என் சரித்திரம்

என் சரித்திரம், உ.வே.சாமிநாதையர், அடையாளம் வெளியீடு, விலை: ரூ.400. புத்துயிர்ப்பு, லியோ டால்ஸ்டாய், அடையாளம் வெளியீடு, விலை: ரூ.395   டால்ஸ்டாயின் உலகப் புகழ்பெற்ற படைப்புகளுள் ஒன்றான ‘புத்துயிர்ப்பு’ நாவல், தமிழ்த் தாத்தா உ.வே.சா.வின் தன்வரலாற்று நூலான ‘என் சரித்திரம்’ என இரண்டு முக்கியமான புத்தகங்களை மலிவு விலைப் பதிப்பாகக் கொண்டுவந்திருக்கிறது ‘அடையாளம்’ பதிப்பகம். விலை குறைவு என்பதற்காகத் தயாரிப்பில் ஏதும் சமரசம் இல்லை. சுமார் 800 பக்கங்கள் கொண்ட இரண்டு புத்தகங்களுக்கும் தலா ரூ.400 என்பதாக விலை நிர்ணயித்திருக்கிறார்கள். நன்றி: தமிழ் இந்து, […]

Read more

அருளே ஆனந்தம்

அருளே ஆனந்தம், பி.சுவாமிநாதன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.200 மகா பெரியவரின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களையும் அவரது அறநெறி உரைகளையும் சிந்தனைகளையும் ‘காமதேனு’ வார இதழில் பி.சுவாமிநாதன் தொடராக எழுதினார். அது இப்போது புத்தக வடிவம் பெற்றிருக்கிறது. தொடரோடு இணைந்து வெளியான ஏ.பி.ஸ்ரீதரின் தத்ரூபமான ஓவியங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பும் இடம்பெற்றிருக்கிறது. நன்றி: தமிழ் இந்து, 20/1/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஏர்வாடியார் கருவூலம்

ஏர்வாடியார் கருவூலம், கவிஞர் இரா.ரவி, வானதி பதிப்பகம், பக். 114, விலை 70ரூ. கலைமாமணி ஏர்வாடியார் எழுத்தாளர், பேச்சாளர், நாடக ஆசிரியர், இதழாசிரியர் என பன்முக ஆற்றலாளர். இந்த நுாலின் ஆசிரியர், ஏர்வாடியாரின் படைப்புலகம் குறித்து இரு பெரும் தகுதிகளை மிக அழகாக பதிவு செய்திருக்கிறார். ஒன்று, ஏர்வாடியார் தன் படைப்புகள் மூலம் எவ்வாறு மற்றவர்களை ஈர்த்தார் என்பது. மற்றொன்று, அவர் தன் திறனாய்வுகள் மூலம் எவ்வாறு படைப்பாளிகளை ஊக்குவித்தார் என்பது. சரியாகச் சொன்னால் இந்த நுாலாசிரியரான கவிஞர் ரவியை, அவர் எவ்வாறு ஊக்குவித்தார் […]

Read more

ஆதார் கார்டு A to Z

ஆதார் கார்டு A to Z, வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக். 256, விலை 230ரூ. இந்திய மக்களின் ஆதாரத்திற்கான அடையாளமாக இருக்கும், ‘ஆதார்’ அடையாள அட்டை பற்றி, அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் எளிமை தமிழிலும், விளக்கங்களை ஆங்கிலத்திலும் தந்துள்ளார், இதன் ஆசிரியர். ஆதார் அடையாள எண் பெறுவது எப்படி என்பது துவங்கி, ‘ஆன்லைன்’ மற்றும் அலுவலகத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது எப்படி என்பது வரை விபரமாக குறிப்பிட்டு உள்ளார். ஆதார் மையங்கள் எங்கெங்கு உள்ளன; தொலைந்து போனால் மீண்டும் பெறுவது எப்படி […]

Read more

மனம் சொல்லுமே மகிழ்ச்சி

மனம் சொல்லுமே மகிழ்ச்சி, ந.ஸ்ரீதர், மணிமேகலைப் பிரசுரம், பக். 96, விலை 80ரூ. அன்றாட நிகழ்வை சுட்டிக்காட்டி, அதன் மூலம் நமக்கு வாழ்க்கையின் புரிதலை, ‘மனம் சொல்லுமே மகிழ்ச்சி’ என்ற நுாலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் வழியே காட்டுகிறார். நாளை நிகழவுள்ள நிகழ்வுக்காக, இன்றுள்ள பொழுதை வாழ வழியில்லாமல் தவிக்கும் மனிதர்களுக்கு, ‘நம் மனதில் உள்ள குப்பைகள்’ என்ற தலைப்பில் புத்துணர்ச்சி மலரச் செய்யும் பொக்கிஷம் இந்நுால் என்றால் மிகையாகாது. நன்றி: தினமலர், 2/2/2020 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் […]

Read more
1 5 6 7 8