என் சரித்திரம்

என் சரித்திரம், உ.வே.சாமிநாதையர், அடையாளம் வெளியீடு, விலை: ரூ.400. புத்துயிர்ப்பு, லியோ டால்ஸ்டாய், அடையாளம் வெளியீடு, விலை: ரூ.395   டால்ஸ்டாயின் உலகப் புகழ்பெற்ற படைப்புகளுள் ஒன்றான ‘புத்துயிர்ப்பு’ நாவல், தமிழ்த் தாத்தா உ.வே.சா.வின் தன்வரலாற்று நூலான ‘என் சரித்திரம்’ என இரண்டு முக்கியமான புத்தகங்களை மலிவு விலைப் பதிப்பாகக் கொண்டுவந்திருக்கிறது ‘அடையாளம்’ பதிப்பகம். விலை குறைவு என்பதற்காகத் தயாரிப்பில் ஏதும் சமரசம் இல்லை. சுமார் 800 பக்கங்கள் கொண்ட இரண்டு புத்தகங்களுக்கும் தலா ரூ.400 என்பதாக விலை நிர்ணயித்திருக்கிறார்கள். நன்றி: தமிழ் இந்து, […]

Read more

கம்பராமாயணம் சுந்தரகாண்டம் – விளக்கவுரை

கம்பராமாயணம் சுந்தரகாண்டம் – விளக்கவுரை, உ.வே.சாமிநாதையர், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், பக்.1144, விலை ரூ. 500. கம்பராமாயணத்திலேயே மிகச்சிறந்த பகுதி, சீதையின் குணநலன்களையும் அநுமனின் பெருமைகளையும் கூறும் சுந்தரகாண்டமே ஆகும். அநுமனுக்கு ‘சுந்தரன் 39’ என்று ஒரு பெயர் வழங்கப்படுவதால் அவனுடைய வீர தீரச் செயல்களை விரிவாகக் கூறும் பகுதி ’சுந்தரகாண்டம் 39’ என்று வழங்கப்படலாயிற்று. இக்காண்டத்தை நாள்தோறும் படிப்பவருக்கு நல்லன எல்லாம் கிட்டும் என்பது ஆன்றோர் வாக்கு. அப்படிப்பட்ட சிறப்புப் பெற்ற கம்பராமாயணத்தின் பல பிரதிகளை ஆராய்ந்து ‘தமிழ்த்தாத்தா 39’ உ.வே.சாமிநாதையர் […]

Read more

சங்கீத வித்துவான்கள் சரித்திரம்

சங்கீத வித்துவான்கள் சரித்திரம், உ.வே. சாமிநாதையர், பதிப்பாசிரியர் மகாவித்துவான் வே. சிவசுப்பிரமணியன், முனைவர் கோ. உத்திராடம், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம் வெளியீடு, சென்னை, பக். 112, விலை 80ரூ. இசையும் தமிழ்த் தாத்தாவும் தமிழ், தெலுங்கு, கன்னட, மகாராஷ்டிர வாய்ப்பாடு மற்றும் வாத்திய இசை வித்துவான்கள் 402 பேர்களைப் பற்றி நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழ்த் தாத்தா உ.வே.சா. எழுதிய குறிப்புகளின் தொகுப்புதான் ‘சங்கீத வித்துவான்கள் சரித்திரம்’ என்ற நூல். 1914ல் எழுதப்பட்ட வித்துவானக்ள் பற்றிய குறிப்புகள் இப்போதுதான் நூலாக அச்சிடப்பட்டுள்ளது. உ.வே.சாவின் […]

Read more

ரேஷன் கார்டு கையேடு

ரேஷன் கார்டு கையேடு, ரேவதி பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 150ரூ. மக்களுக்குத் தெரிய வேண்டிய தகவல்களை சேகரித்து, பொக்கிஷம் என்ற பொதுத் தலைப்பில் புத்தகங்களாக எழுதி வெளியிடுகிறார் வடகரை செல்வராஜ். இப்போது அவர் எழுதியுள்ள பொக்கிஷம் ரேஷன் கார்டு. இக்காலக்கட்டத்தில் மற்ற அடையாள கார்டுகளைவிட மக்களுக்கு அத்தியாவசியமாக விளங்குவது ரேஷன் கார்டு(குடும்ப அட்டை). புதிதாக ரேஷன் கார்டு வாங்க என்ன செய்ய வேண்டும், கார்டில் பெயர்களைச் சேர்க்கவோ, நீக்கவோ உள்ள விதிகள் என்ன? ரேஷன் கார்டு காணாமல்போனால் என்ன செய்ய வேண்டும்? என்பது போன்ற […]

Read more