மூன்றாம் உலகப் போர்
மூன்றாம் உலகப் போர், வைரமுத்து, திருமகள் நிலையம், சென்னை. விலை ரூ. 300 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-382-0.html
புவிவெப்பமயமாதல், விவசாயத்தின் நலிவு நிலை, சுற்றுச் சூழல் சீர்கேடு ஆகிய பிரச்னைகளைக் கலந்து புனைவு முலாமில் இந்த மூன்றாம் உலகப் போரை நடத்தியிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. உலகம் முழுக்க இந்த நாவலின் கதாபாத்திரங்கள் படர்ந்திருக்கின்றன. இதன் மூலம் உலக நாவல் என்ற தனது கூற்றை நியாயப்படுத்தியுள்ளார். வைரமுத்துவின் கவித்துவமும், வாழ்ந்து பெற்ற அனுபவங்களும் சுவாரசியமாக வாசகனை இழுத்துக்கொண்டு போகின்றன. மேற்குத்தொடர்ச்சி மலை தொடர்ந்து புறக்கணிக்கப்படும் அவலத்தை மனம் கனக்கச் சொல்கிறார் வைரமுத்து. இயற்கை வாழ்வாதாரங்கள், வேகமாக அருகி வரும் நிலையில் இதுபோன்ற படைப்பு வருவது கவனத்துக்குரியது.
—
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், சுப்ரமணியன் சுவாமி, கிழக்கு பதிப்பகம், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை – 14. விலை ரூ. 195 To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-703-9.html
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம், புனைவா? உண்மையா? என்று சொல்ல முடியாத திருப்பங்கள் மற்றும் முடிச்சுகளைக் கொண்டது. நாடு முழுவதும் சாதாரண மக்களும் வியக்கும் அளவுக்கு இந்த ஒதுக்கீட்டில் நடந்த விவகாரங்களைப் பரந்த அளவில் கவனத்திற்குக் கொண்டு வந்தவர் சுப்ரமணியன் சுவாமி. சுதந்திர இந்தியாவில் நடந்த பிரமாண்ட ஊழல் என்று கூறப்படும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு விவகாரத்தை பல்வேறு ஆதாரங்களுடன் சுப்ரமணியன் சுவாமி தெளிவாக எழுதியுள்ள நூல் இது. பிரதமருக்கும் அப்போது தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவுக்கும் நடந்த கடிதப் பரிமாற்றங்கள், பல்வேறு சாட்சியங்கள் ஆகியவற்றைப் பரிசீலித்து எழுதப்பட்ட நூல் இது. இந்நூலை அரசியல் சாசன அமைப்புக்கும் நாட்டின் இறையாண்மையைக் காக்கும் நிறுவனங்களுக்கும் சமர்ப்பித்துள்ளார் நூல் ஆசிரியர் சுவாமி. நன்றி: த சன்டே இந்தியன் 23-12-12