பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும்

பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும், சாமி. சிதம்பரனார், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 32பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், தி. நகர், சென்னை 17, பக். 168, விலை 60ரூ. TO buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-039-0.html

உலகம் கோடி ஆண்டுகளுக்கு முன் எவ்வாறு உருவாக்கப்பட்டது? கடவுள் படைத்த உலகம், உயிரினங்கள், மனிதன், விலங்கு, செடி கொடிகள், ஒழுக்கம் பற்றிய மெய்ஞானிகள் கருத்து என்ன? 200 கோடி ஆண்டுகளுக்கு முன், உலகம் உருவானது பற்றிய விஞ்ஞானிகள் விளக்கம் என்ன? இலக்கியப் பாடல்களுடன் சாமி. சிதம்பரனார் இந்நூலில் சுவையாக விளக்கியுள்ளார். அரசவையில் அமைச்சர், புரோகிதர், சேனாபதியர், தூதுவர், சாரணர் ஆகிய ஐம்பெருங்குழுவும், எட்டு பேர் கொண்ட எண்பேராயமும் பற்றி சிலப்பதிகாரமும், மணிமேகலையும் கூறும் உள்ளாட்சி முறைகள் விளக்கப்பட்டுள்ளன. சிவன், முருகன், திருமால், இந்திரன், தட்சிணாமூர்த்தி, வருணன் ஆகிய கடவுள் வழிபாடு, காளி, துர்க்கைக்கு பலியிட்டு வழிபடுதல் ஆகியன விளக்கப்பட்டு, சான்றுகளும் தரப்பட்டுள்ளன. ஆணும், பெண்ணும் முதல் சந்திப்பில் மயங்கிப்போய் காதலித்து, கல்யாணம் செய்வதற்கு ஆசை காரணமல்ல,விதியே காரணம் என்று தொல்காப்பியம் கூறுவது, இன்றும் மாறாத உண்மையாக உள்ளது. மறுபிறப்பு உண்டு என்று இந்து, புத்த, சமணமதங்கள் கூறுவதும், இல்லை என இஸ்லாம், கிறிஸ்தவ சமயங்கள்பேசுவதும் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளன. மாமிச உணவே தமிழர் உணவு, மதுபானம், எவருக்கும் பழக்கம் உண்டு. பண்டைத் தமிழகத்தில் பார்ப்பனர்களும் மது, மாமிசம் உண்டதை புறநானூற்றின் சான்றுடன் தெளிய வைக்கிறது நூல். தமிழரின் உடன்கட்டை ஏறல், சகுனங்கள், பண்டிகைகள், பெண் சம உரிமை, ஆண்கள் விலை மாதர் தொடர்பு, கலை உணர்வு ஆகியன விளக்கப்பட்டுள்ளன. உலகில் தலைசிறந்தவராய் அன்றே தமிழர் விளங்கியதை இந்நூல் விவரிக்கிறது. -முனைவர் மா.கி. ரமணன். நன்றி: தினமலர், 9/10/2011.  

—-

 

பிளஸ் 2வுக்கு பிறகு?, சு.அகிலன், பொன்புத்தகாலயா, 7, தங்கையா தெரு, காந்தி நகர், நாகல்கேணி, சென்னை 44, விலை 150ரூ.

பிளஸ் 2 படித்த மாணவர்கள், மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று எளிதில் முடிவு எடுக்க முடியாமல் குழம்புவது இயற்கை. அவர்களுக்கு வழிகாட்டும் புத்தகம் இது. ஒவ்வொரு துறையிலும் சாதனை படைக்க என்ன படிக்க வேண்டும், அதற்கு அடிப்படைத் தேவைகள் என்ன என்பதை எல்லாம் தெளிவாக விளக்குகிறார் ஆசிரியர் சு.அகிலன். மாணவர்களுக்கு அருமையான கையேடு. நன்றி: தினத்தந்தி, 8/2/2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *