மறவர் சரித்திரம்

மறவர் சரித்திரம், வீ. ச. குழந்தை வேலுச்சாமி, முல்லை நிலையம், 9, பாரதிநகர், முதல்தெரு, தி.நகர், சென்னை 17, விலை 60ரூ.

தமிழகத்தின் பழமை குடி மக்கள் என்று கூறப்படும் மறவர்கள் வாழ்ந்து வந்த பகுதிகள், நாயக்கர் அரசாட்சியில் தென்நாட்டு பகுதிகளில் மன்னவர்களாய் மறவர்கள் இருந்த பெருமைகள் உள்ளிட்ட மறவர்கள் பற்றிய பல தகவல்களை இந்நூல். நன்றி: தினத்தந்தி, 22/5/13  

—-

 

மண்ணை அளந்தவர்கள், பழ. கோமதி நாயகம், பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 35ரூ.

மனித நாகரிக வரலாற்றில் நிலத்தை அளப்பது என்பது வரலாறு தொடகிய காலத்திலிருந்தே உலகெங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நிலம் மற்றும் நிலஅளவை குறித்து அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்ட நூல் மண்ணை அளந்தவர்கள். வரைபடங்கள், மற்றம் அரிய புகைப்படங்கள், பட்டியல்களுடன், பொதுப்பணித்துறையில் தலைமைப் பொறியாளராக இருந்து ஓய்வு பெற்ற முனைவர் பழ. கோமதி நாயகம் எழுதியுள்ளார். இதில் நில அளவை, நிலவரை உருவான விதத்தை தெளிவுபடுத்தி இருப்பதுடன், தமிழகத்தில் நில அளவை எவ்வாறு தோன்றியது அதன் வரலாற்றையும் நூலாசிரியர் தெளிவுபடுத்தி உள்ளார். நில அளவை தொடர்பாக வாசகர்களுக்கு பயனுள்ள தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 22/5/13  

—-

 

கனவுகள், ரா.குமரவேலன், சாகித்திய அகாடமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 125ரூ.

சமுதாயத்தில் உள்ள சிக்கல்களை சமூக உணர்வோடும், மனித நேயத்தோடும் அணுகியதுடன் ஒரிய மக்களின் வாழ்க்கையை, அவர்களின் உணர்வுகளோடு கலந்து பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த சிறுகதை தொகுப்பு. ஓரிய மொழியில் சந்திரசேகர் ராத் என்பவர் எழுதிய நூல் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 22/5/13  

—-

 

நாட்டு நடப்பும் நமது பொறுப்புகளும், டி.அஜீத் லுத்புல் லாஹ், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், 138, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை 12, விலை 40ரூ.

ஜமாத்தே இஸ்லாமிஹிந்த் தலைவராக இரண்டாவது முறையாகத் தேர்ந்து எடுக்கப்பட்ட மவுலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அளித்த பேட்டி, நூலாக வெளிவந்துள்ளது. நாட்டு நடப்பு, இந்திய இஸ்லாமிய சமகப் பிரச்சினைகள், தேச, உலகப் பிரச்சினைகள், முஸ்லிம் தனியார் கூட்டம் போன்ற பல கேள்விகளுக்கு விரிவான விடை. இதை தமிழில் டி.அஜீத் லுத்புல் லாஹ் மொழி பெயர்த்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 22/5/13

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *