சங்கச் செவ்வியல்
சங்கச் செவ்வியல் (சங்க கிரேக்க ஒப்பீடு), முனைவர் செ. சாரதாம்பாள், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை 1, பக். 336, விலை 175ரூ.
நீண்ட விரிவான மரபும் கட்டுக்கோப்பும் விரிவான முறைமைகளும் கொண்ட தன்மைதான் செவ்வியல். இதை ஆங்கிலத்தில் கிளாசிசம் என்பர். அத்தகைய செவ்வியல் பண்பைத் தமிழ் இலக்கியங்கள் பெற்றிருக்கின்றன. வாய்மொழி இலக்கியப் பண்புகளும் வரிவடிவ இலக்கியச் செம்மையும் ஒன்றமிடத்தில்தான் செவ்வியல் தோற்றம் பெறுகிறது என்பது நிதர்சன உண்மை. தமிழில் இலக்கியங்களில் உள்ள செவ்வியல் கூறுகளை பண்புகளை, கிரேக்க இலக்கியங்களுடன் ஒப்பிட்டு சில ஆய்வு முடிவுகளை முன்வைத்துள்ளார். செவ்வியலின் தோற்றம், கருத்துவளர்ச்சி, பண்புகள், தொல்காப்பியமும் செவ்வியல் பண்புகளும் என இவருடைய ஆய்வு பரந்து விரிந்துள்ளது. கிரேக்கக் கோட்பாட்டின் சிறந்த கூறுகள் இன்பமும், அவ்வின்பத்தை உயர்ந்த அறங்களோடு தழுவிக்கொண்ட அறிவுமாகும் என்ற வ.சுப. மாணிக்கம் கிரேக்கக் கோட்பாட்டின் அமைப்பினைக் குறிப்பிடுகிறார். இவற்றின் மூலம் இவர் இன்பமும் அறவழிப்பட்டுத் திகழவேண்டும் என்ற கோட்பாடுடையவர்களாகக் கிரேக்கர்கள் திகழ்ந்தனர் என்ற கருத்தினைப் புலப்படுத்துகின்றார்(பக்.80) என்ற வ.சு.ப. மாணிக்கத்தின் தமிழ்க் காதல் நூலை மேற்கோள் காட்டி விளக்கியிருப்பது அருமை. முனைவர் பட்டத்துக்கான ஆய்வுநூல் என்றாலும் ஆய்வாளர் தேர்ந்தெடுத்த இலக்கியக் களம் சுவாரசியமானது என்பதால் சலிப்பில்லாமல் படிக்க முடிகிறது. நன்றி: தினமணி, 26/9/11.
—-
கண்ணான என் கண்மணி, இந்திரா சவுந்தராஜன், திருமகள் நிலையம், 13, சிவபிரகாசம் தெரு, தி.நகர், சென்னை 17, பக். 224, விலை 90ரூ.
இன்றைய தினம் தொடர்கதை வாசிப்பவர்களின் அகோரப் பசிக்கு, தீனி போடும் திறமைசாலி வர்க்கத்தைச் சேர்ந்த இந்திரா சவுந்திராஜனின் இந்த விறுவிறுப்பான நாவல் பற்றிக் கூறவேண்டுமென்றால், ஒரே மச்சில் படித்து முடிக்க வேண்டும் என்ற ஆவல் முதல் பக்கத்தைப் படிக்கும்போதே ஏற்பட்டுவிடுகிறது. -ஜனகன். நன்றி: தினமலர், 16/10/2011.