எப்படி கதை எழுதுவது

எப்படி கதை எழுதுவது?, ரா.கி. ரங்கராஜன், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 258, விலை 170ரூ.

இந்தப் புத்தகத்தை முழுமையாக படித்து முடித்தால் போதும். உங்களால்கூட ஒரு நல்ல நாவல் எழுத முடியும். அவ்வளவுக்குப் பயிற்சி அளிக்கிறார் இந்நூல் மூலமாக ரா.கி. ரங்கராஜன். எப்படி கதை எழுத வேண்டும்? கதைக்கான அம்சங்கள் என்னென்ன இருக்க வேண்டும்? எப்படி ஆரம்பிப்பது. அதில் வரும் காட்சிகள், வர்ணனைகள், கதாபாத்திரங்கள், எப்படிப்பட்ட நடை இருக்க வேண்டும் என்றெல்லாம் விலாவாரியாக இந்நூலில் சொல்லித் தந்துள்ளார். அவர் குமுதத்தில் எழுதிய கட்டுரைகளையும் அஞ்சல் வழியாக கதை எழுத சொல்லிக் கொடுத்த பாடங்களையும் தொகுத்து குமுதம் குழுமத்தினர் இந்நூலை உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு நல்ல எழுத்தாளனை உருவாக்கும் சிறந்த பணி இது. நன்றி; குமுதம், 4/9/2013  

—-

 

மானுட வெளிச்சம், விடியல் ஒளி பண்ணை, 211அ, எழில் நகர், கோவை சாலை, கரூர், விலை 100ரூ.

மனித வாழ்க்கை வெற்றிக்கு கல்வி அறிவும் தன்னம்பிக்கையும்தான் அவசியம். பக்திமார்க்கம் அல்ல என்பதை வலியுறுத்துகிறார். நூலாசிரியர் செங்குட்டுவன். அவனின்றி அணுவும் அசையாது என்ற வாக்கியத்தில் அவன் என்பது கடவுள் அல்ல மனிதன்தான் என்றும் சாதி, மதம், ஒழிய வேண்டும் என்றும் வலியுறுத்துப்பட்டு உள்ளது. அறிவியல் விழிப்புணர்வு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. நன்றி : தினத்தந்தி, 28/8/2013.  

—-

 

வாசித்தவை யோசிக்காதவை, ம.டைட்டஸ்மோகன், வைகறை பதிப்பகம், 6, மெயின்ரோடு, திண்டுக்கல் 624001, விலை 35ரூ,

வாழ்க்கையின் எதார்த்தங்களை, ஒளிவுமறைவு இன்றி, சிந்திக்க தூண்டும் விதத்தில், அறிஞர்கள் பலரின் பொம்மொழிகளை மேற்கொள்காட்டி ஆசிரியர் இந்த நூலினை தந்துள்ளார். நன்றி : தினத்தந்தி, 28/8/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *