சென்னைக்கு மிக அருகில்
சென்னைக்கு மிக அருகில், விஸ்வபாரதி, காவ்யா, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-221-8.html
இது ஒரு சிறுகதைத் தொகுப்பு. பன்னிரெண்டு சிறுகதைகள். வாழ்க்கையோடு தொடர்புடைய விஷயங்களைக் கதைக் களமாக வைத்து, எழுதப்பட்டவை. புத்தகத்தின் தலைப்பாகத் தேர்வு செய்துள்ள கதையில், வீடு தேடும் இன்றைய மத்திய வர்க்க மக்களின் ஆர்வமும், தேடலும் மிக நன்றாக சித்தரிக்கப்பட்டுள்ளது. கடைசிக் கதை வடக்கத்தி பையன், நம்மை யோசிக்க வைக்கிறது. கதைகளின் வரிசைப்படி பொருளடக்கம் இல்லை. புத்தகத் தயாரிப்பில் இது அவசியமல்லவா? -ஜனகன். நன்றி: தினமலர், 4/5/14.
—-
சென்னைக்கு வெளியே உள்ள 100 கோவில்கள், வெள்ளியங்குடி மு. நக்கீரன், ஆனந்த நிலையம், பக். 224, விலை 150ரூ.
சென்னை நகரத்தைச் சுற்றியுள்ள சிவ, வைணவ, அம்பாள், முருகன் என 100 திருத்தலங்களில் உள்ள திருக்கோவில்களைப் பற்றிய தலபுராணம் செல்லும் வழி, வழிபாட்டு நேரம், பாடல் பெற்றிருப்பின் அதன் தகவல் என, பயனுள்ள செய்திகளை சுருக்கமாக தந்துள்ளார் நூலாசிரியர். திருத்தல யாத்திரை செல்வோருக்குப் பயனுள்ள கையேடு. -குமரய்யா. நன்றி: தினமலர், 4/5/14.
—-
குறளறம், புலவர் கோ. அருளாளன், செஞ்சி வட்டம் 604 152, பக். 240, விலை 150ரூ.
திருக்குறள் அறநூல் என்பதை அனைவரும் அறிவர். ஆசிரியர் தமிழில் அதிக பற்று கொண்ட தமிழாசிரியர். அறத்துப்பாலில் உள்ள, குறள் பாக்கள் சிலவற்றிற்கு எளிய தமிழில், விருத்தப்பா கவிகளாக அமைத்து விளக்கம் தந்திருப்பது இந்த நூலின் சிறப்பாகும். எத்துறையில் பணி புரிந்தாலும், அதில் முழுதாய் முயன்று அச்செயலில் புகழை அடைந்து உயர்தல் வேண்டும் என்ற கருத்தை, தோன்றிற் புகழொடு தோன்றுக என்ற குறளுக்கு விளக்கமாக தந்திருக்கிறார். தமிழ் ஆர்வலர்கள் படிக்க விரும்பும் நூல். நன்றி: தினமலர், 4/5/14.