அதிசய சித்தர் போகர்
அதிசய சித்தர் போகர், எஸ். சந்திரசேகரன், கற்பகம் புத்தகாலயம், விலை 90ரூ.
தூய தவ வலிமையின் காரணமாக தெய்வநிலையை அடைந்துவிடும் மகான்களான சித்தர்கள் தங்களது அற்புத சக்திகளை, துன்பப்படுபவர்களின் துயரங்களைப் போக்குவதற்கு பயன்படுத்தியுள்ளனர் என்பதை நூலாசிரியர் விரிவாக எடுத்துக் கூறி உள்ளார். நன்றி: தினத்தந்தி, 14/10/2015.
—-
இளவரைவியலும் தமிழ்நாவலும், ஆ.சிவசுப்பிரமணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 155ரூ. ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றிய இனவரைவியல் செய்திகளை மனதில்கொண்டு இனவரைவியலுக்கும் நாவலுக்குமான தொடர்பை இந்நூல் ஆராய்கிறது. நன்றி: தினத்தந்தி, 14/10/2015.
—-
கனவுகண்ட கதாநாயகன் தொன் போஸ்கோ வாசாப்பு, புலவர் அருளானந்தம் செபமாலை, தொன் போஸ்கோ நிறுவனம் வெளியீடு, விலை 300ரூ. தொன் போஸ்கோவின் 200வது பிறந்த விழா நினைவையொட்டி அவருடைய நினைவாக எழுதப்பட்ட கூத்து நாடக நூல். நன்றி: தினத்தந்தி, 14/10/2015.