தமிழ்வாணனின் தன்னம்பிக்கைக் கட்டுரைகள்
தமிழ்வாணனின் தன்னம்பிக்கைக் கட்டுரைகள், தமிழ்வாணன், லேனா தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், விலை 250ரூ.
தன்னம்பிக்கையும், மன உறுதியும் இல்லாத காரணத்தினால்தான் பலருடைய பொன்னான காலம் வீணாகி அவர்கள் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. தன்னம்பிக்கையும், துணிவும் கொண்டு செயல்பட்டால் எதையும் சாதிக்க முடியும் என்பதை வலியுறுத்தும் கட்டுரைகளின் தொகுப்பு நூல். ஒருவரது திறமையை வளர்க்க ஒரு ஆசிரியரே, வழிகாட்டியோ நிச்சயம் தேவை. அந்த ஆசிரியர் ஒரு புத்தகமாகவோ, மனிதனாகவோ ஏன் நமது மனதாகக்கூட இருக்கலாம். எனவே, திறமை வளர்க்கும் வழிகளை எல்லாவற்றிலும் தேடுங்கள் என 62 கட்டுரைகள் அளித்துள்ளார் தமிழ்வாணன். நன்றி: தினத்தந்தி, 6/1/2016.
—-
லால் சலாம் காம்ரேட், இ.எம்.எஸ்., தொகுப்பும் மொழிபெயர்ப்பும் உதயசங்கர், உத்ரகுமாரன், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், விலை 60ரூ.
இந்திய அரசியலை பெரிதும் அறிவுப்பூர்வமாக மாற்றிய இ.எம்.சங்கரன் நம்பூதிரி பாட் நினைவில் எழுதப்பட்ட கட்டுரைகள் தொகுப்பு நூல். நன்றி: தினத்தந்தி, 6/1/2016.