பெண் எனும் பேராளுமைகள்

பெண் எனும் பேராளுமைகள், தொகுப்பும் மொழிபெயர்ப்பும்: கிருஷாங்கினி, பாரதி புத்தகாலயம், பக்.128, விலை ரூ.120. நூலில் உள்ள 7 கட்டுரைகளில் “அம்பேத்கரின் பெண் விடுதலை ஒரு பார்வை” என்ற கட்டுரையும், பரதநாட்டியம் பற்றி என்ற கட்டுரையும் தவிர, பிற கட்டுரைகள் பெண் ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகளாக அமைந்துள்ளன. “அம்பேத்கரின் பெண் விடுதலை ஒரு பார்வை” கட்டுரை பெண் விடுதலை தொடர்பான அம்பேத்கரின் பார்வையையும், பணிகளையும் விளக்குகிறது. பெண் விடுதலைக்கு அதையும் தாண்டி செய்ய வேண்டியவற்றைச் சுட்டிக்காட்டுகிறது. “பரதநாட்டியம் பற்றி“ கட்டுரை பரதநாட்டியம் தொடர்பான அனைத்து […]

Read more

கலை வரலாறு சில புதிய அணுகுமுறைகள்

கலை வரலாறு சில புதிய அணுகுமுறைகள், தொகுப்பும் மொழிபெயர்ப்பும் தேன்மொழி, மணற்கேணி பதிப்பகம், விலை 100ரூ. கலைகள் குறித்த உணர்வும் அறிவும் அக்கறையும் இல்லாத சமுதாயம் தன் மனதையும் முகத்தையும் அழித்துக்கொள்கிறது. பண்டைய சமுதாயத்தின் பண்பாட்டு ஆவணங்களான அவை பேணப்படுவதுடன் ஆராயப்படவும் வேண்டும். இன்று தனியாரும் கல்விப்புலங்கள் சார்ந்த பலரும் ஆய்வுகளில் ஈடுபட்டாலும் ஆய்வை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்கான ஆய்வு அணுகுமுறை சார்ந்த நூல்களும் கோட்பாடு சார்ந்த நூல்களும் மிகமிகக் குறைவாகவே உள்ளன. இக்குறை களையப்பட வேண்டும் என்ற ஆதங்கத்தின் விளைவாக, கலையியல் […]

Read more

தமிழ்வாணனின் தன்னம்பிக்கைக் கட்டுரைகள்

தமிழ்வாணனின் தன்னம்பிக்கைக் கட்டுரைகள், தமிழ்வாணன், லேனா தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், விலை 250ரூ. தன்னம்பிக்கையும், மன உறுதியும் இல்லாத காரணத்தினால்தான் பலருடைய பொன்னான காலம் வீணாகி அவர்கள் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. தன்னம்பிக்கையும், துணிவும் கொண்டு செயல்பட்டால் எதையும் சாதிக்க முடியும் என்பதை வலியுறுத்தும் கட்டுரைகளின் தொகுப்பு நூல். ஒருவரது திறமையை வளர்க்க ஒரு ஆசிரியரே, வழிகாட்டியோ நிச்சயம் தேவை. அந்த ஆசிரியர் ஒரு புத்தகமாகவோ, மனிதனாகவோ ஏன் நமது மனதாகக்கூட இருக்கலாம். எனவே, திறமை வளர்க்கும் வழிகளை எல்லாவற்றிலும் தேடுங்கள் என 62 […]

Read more