பறந்து மறையும் கடல் நாகம்

பறந்து மறையும் கடல் நாகம், ஜெயந்தி சங்கர், காவ்யா, விலை 1000ரூ.

ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கன்பியூஷியஸ் வகுத்தளித்த கோட்பாட்டின் கீழ் மூதாதையர் வழிபாடு, பெற்றோரை மதித்துப் பேணிக் காத்தல், ஆண் வாரிசுகளை உருவாக்குதல் போன்ற மூன்று முக்கிய அலகுகளைச் சுற்றி உருவானதே சீனக் கலாசாரம். அத்தகைய சீனக் கலாசாரம் குறித்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். தமிழர் பண்பாட்டுடன் சீனப் பண்பாடு பல வகைகளில் ஒத்துப் போகிறது. இது குறித்தும், சீனப் பெண்களின் குடும்ப வாழ்க்கை, அவர்களின் அடிமைத்தனம், சமூக சிக்கல்கள், இலக்கியத்திலும் அரசியலிலும் அவர்களுக்கான இடம், கல்வி முறை போன்றவை பற்றியும் ஜெயந்தி சங்கர் விரிவாகவும் சுவையாகவும் எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 27/1/2016.  

—-

காளவாய், கு.வெ. பாலசுப்பிரமணியன், நியூசெஞ்சுரிபுக் ஹவுஸ், விலை 145ரூ.

சமூக அநீதிகளுக்கெதிரான பலதரப்பட்ட கதாபாத்திரங்களின் ஒருங்கிணைந்த குரலாக இந்நாவல் அமைந்துள்ளது. நீதியையும், நேர்மையையும் அறவழியில் நிலைநாட்டும் முயற்சியில் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் போராடுவதும், இறுதியாக உண்மையும் தர்மமும் நிலைநாட்டப்படுவதும் சமூக நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது. நன்றி: தினத்தந்தி, 27/1/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *