விடைதேடும் வினாக்கள்

விடைதேடும் வினாக்கள், வாழ்வியல் – ஆன்மிகம் – தத்துவம் குறித்த தேடல்களுக்கான விடைகள், தமிழருவி மணியன், கற்பகம் புத்தகாலயம்,  பக்.216, விலை ரூ.160. விடைதெரியாத கேள்வி களுக்கு இடையில்தான் வாழ்க்கை நதி ஓடிக் கொண்டிருக்கிறது என இந்நூல் உருவாகியதற்கான காரணத்தை ஒரு வரியில் சொல்கிறார் நூலாசிரியர். எந்தக் கேள்வியாக இருந்தாலும் அதற்கு அறிஞர் பெருமக்கள், ஆன்மிகப் பெரியோர்கள், தத்துவ ஞானிகள், கவிஞர்கள் ஆகியோர் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதையே பெரும்பாலும் தனது பதிலாகத் தந்திருக்கிறார். என்னைச் சுற்றியிருப்பவர்கள் தீமையின் வடிவங்களாக வலம் வரும்போது, அவர்களிடமிருந்து எப்படி என்னை […]

Read more

பெண்களுக்கு எதிரான வன்முறைகள்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் (தீர்வுக்கான வழிமுறைகளும்), சி.எஸ்.தேவநாதன், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக்.200, விலை ரூ.180. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்று நூலின் தலைப்பு இருந்தாலும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளிலிருந்தே நூல் தொடங்குகிறது. குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறை,பாலியல் தொழிலில் சிறுமிகள் ஈடுபடுத்தப்படுவது, பாலியல் தொழிலாளர்களின் மோசமான வாழ்க்கை நிலை என நூல் விரிகிறது. குடும்பத்தில் பெண்ணின் நிலை, இளம் வயதில் பெண்களைத் திருமணம் செய்து தருதல், வரதட்சணைக் கொடுமை, பெண்களை அடித்தல், கட்டாயத் திருமணம் உட்பட பெண்கள் கொடுமைக்குள்ளாக்கப்படுவதைப் பற்றியும் நூல் விவரிக்கிறது. வேலை […]

Read more

விடிவதற்கு சற்று முன்னே…

விடிவதற்கு சற்று முன்னே…, ரஷ்யமூலம்: ஐவான்துர்கனேவ், தமிழில் ஆர்.சி.சம்பத், அருணா பப்ளிகேஷன்ஸ், பக்.304, விலை ரூ.200. பொதுவாக ரஷ்ய இலக்கியப் படைப்புகள் தனிமனித உணர்வுகளை தேசத்தின் நலனோடு இணைப்பதாகவே படைக்கப்பட்டிருக்கின்றன. படைப்பாளி உருவாக்கிய பாத்திரங்களின் உணர்வுகளோடு அதை படிக்கும் வாசகன் ஒன்றிவிடும் வகையில் ரஷ்ய படைப்புகள் இருப்பதே அவற்றின் வெற்றிக்கான காரணமாகக் கூட கூறலாம். அந்தவகையில் விடிவதற்கு சற்று முன்னே என்ற இந்த நாவல் ரஷ்ய புரட்சியை மையமாக வைத்து காதல் உணர்வோடு பின்னப்பட்ட படைப்பாகும். தேச நலன் கொண்ட தலைமறைவு வாழ்க்கை வாழும் […]

Read more

மெய்ப்பொருள் கண்டேன்

மெய்ப்பொருள் கண்டேன், எஸ்.ஆர்.சுப்ரமணியம், பழனியப்பா பிரதர்தஸ், பக்.348, விலை ரூ.320. சுதந்திரப் போராட்ட வரலாற்றை மிக எளிமையாக, சுவையாகச் சொல்லும் நூல். கி.மு.325 இல் மாசிடோனியா மன்னன் அலெக்சாண்டர் சிந்துசமவெளியைத் தாண்டி படையெடுத்து வந்து இந்திய மன்னர்களைத் தோற்கடித்தது, கி.பி.1175 இல் முகமது கோரி படையெடுத்து, அதற்குப் பிறகு ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும் ஆக்கிரமித்தது என அடிமையான வரலாற்றை ஒருபுறம் இந்நூல் சொல்கிறது. இன்னொருபுறத்தில் அடிமைத் தளையை எதிர்த்து வேலூர் கலகம், 1857 சிப்பாய் கலகம், திப்புசுல்தான் ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்தது. தீரன்சின்னமலை, வேலுநாச்சியார், வீரபாண்டிய […]

Read more

இணைந்த மனம்

இணைந்த மனம், மிருதுலா கர்க், தமிழில்: க்ருஷாங்கினி,சாகித்திய அகாதெ மி,  பக்.512, விலை ரூ.395 .  சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் நிகழ்ந்த மாற்றங்கள், அது  நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த மனிதர்களின் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் இந்நூலில் பதிவாகியுள்ளன. கதாநாயகி குல்மோஹர், அவளுடைய தங்கை மோகரா, இந்த இருவரின் தோழி ஆகியோருக்கிடையிலான உரையாடல்களின் மூலம் நாவல் சொல்லப்படுகிறது. மனிதர்களுக்கிடையிலான உறவுகள், முரண்பாடுகள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள்,  சிறுவயதில் உள்ள மனிதர்கள் காலப்போக்கில் மாறிவிடுவது, அவர்கள் மீது ஏற்றி வைக்கப்பட்ட பிம்பங்கள் கலைந்து போவது இந்நாவலில் மிக யதார்த்தமாக சித்திரிக்கப்பட்டுள்ளது. […]

Read more

தமிழக நாடார்கள்

தமிழக நாடார்கள் – ஒரு சமுதாய மாற்றத்தில் அரசியல் பண்பாடு- இராபர்ட் எல்.ஹார்டுகிரேவ்- தமிழில்: எஸ்.டி.ஜெயபாண்டியன், அடையாளம்,  பக்.512. விலை ரூ.480. அமெரிக்காவைச் சேர்ந்த நூலாசிரியர் தனது ஆய்வுப் படிப்புக்காக 1960 இல் தமிழகம் வந்து பலரைச் சந்தித்து, மேற்கொண்ட ஆய்வுக்குப் பிறகு THE NADARS OF TAMILNADU என்ற நூலை எழுதியிருக்கிறார். அதன் தமிழாக்கமே இந்நூல். ஒரு காலத்தில் பின்தங்கியவர்களாகக் கருதப்பட்ட நாடார் சமூகத்தினர், தங்களுடைய உழைப்பாலும், முயற்சியாலும், சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கணக்கில் கொண்டு அதற்கேற்ற பொருத்தமான செயல்களாலும் எவ்வாறு முன்னேற்றம் […]

Read more

மனச்சோர்வு

மனச்சோர்வு, சிவபாலன் இளங்கோவன், உயிர்மை பதிப்பகம், விலை 70ரூ. கற்பிதங்களும் உண்மைகளும் மாணவர்கள் மத்தியில் அதிகம் புழங்கும் வார்த்தைகளில் ஒன்றாகிவிட்டது ‘மனச்சோர்வு’. ஆனால் அன்றாடக் கவலைகளும் மனச்சோர்வும் ஒன்றல்ல என்கிறது இப்புத்தகம். இதில், உண்மையில் மனச்சோர்வு என்பது என்ன? நம் மனத்தை எப்படிப் புரிந்துகொள்வது என்பதைச் சொல்வதன் வழியே, அதற்கான தீர்வும் முன்வைக்கப்படுகிறது. நன்றி: பட்டம், தினமலர், 7/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000027820.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

காட்டில் இருந்து வீட்டுக்கு பறவைகள்

காட்டில் இருந்து வீட்டுக்கு பறவைகள் பாகம்1, 2, ஜி.சரண், புக்ஸ் ஃபார் சில்ரன், விலை 30ரூ. இன்று நாம் வீட்டில் வளர்க்கக்கூடிய விலங்குகளும், பறவைகளும் ஒரு காலத்தில் காட்டில் சுற்றித் திரிந்தவை. இவை எல்லாம் வீட்டு விலங்கானது எப்படி என்பதை சுவைபடக் கூறுகிறார் நூலாசிரியர். நன்றி: பட்டம், தினமலர், 7/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தொல்காப்பியம் சங்க இலக்கியம்

தொல்காப்பியம் சங்க இலக்கியம், உரைமேற்கோள் உரைகள், சோ.ராஜலட்சுமி; காவ்யா, பக்.280. விலை ரூ.280. பழந்தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் சுவடிகளிலிருந்து பதிப்பிக்கப்பட்டன. அவ்வாறு பதிப்பிக்கப்பட்ட நூல்களை நாம் புரிந்து கொள்வதற்கு உதவுபவர்கள் உரையாசிரியர்கள். அவ்வாறு உரை எழுதுபவர்கள், உரையை விளக்கத்துக்காக பிற நூல்களை எடுத்துக்காட்டி விளக்கியிருக்கிறார்கள். அவ்வாறு எடுத்துக்காட்டும் நூல்களில் உள்ள சில பகுதிகளுக்கு உரையும் சொல்லியிருக்கிறார்கள். அவற்றைத் தொகுத்து இந்நூல் ஆராய்ந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட இலக்கியம் ஒவ்வொரு காலத்திலும் எவ்வாறு மாறுபட்டு புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்பதையும் இந்நூல் விளக்குகிறது. இந்நூல் தமிழ்ப் புலமை […]

Read more

சர்க்யூட் தமிழன்

சர்க்யூட் தமிழன், புக்ஸ் ஃபார் சில்ரன், விலை 100ரூ. அறிவியல் புனைகதை புத்தகமான இதில் எல்லா கதைகளும் எதிர்காலத்தில் நடக்கிறது. அப்போது அறிவியலும் தொழில்நுட்பமும் எவ்வளவுதூரம் முன்னேறியிருக்கும். நம் வாழ்க்கை முறை எப்படியிருக்கும் என்ற கற்பனையோடு, நையாண்டியும் நகைச்சுவையும் கலந்து விருந்து படைத்திருக்கிறார் சாகித்ய அகாதெமி விருது பெற்ற நூலாசிரியர். நன்றி: பட்டம், தினமலர், 7/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more
1 226 227 228 229 230 505