உப்புச்சுமை

உப்புச்சுமை , ஐ.கிருத்திகா, தேநீர் பதிப்பகம், பக்.168, விலை ரூ.160.  கடந்த 20 ஆண்டுகளாக எழுதிவரும் நூலாசிரியரின் முதல் சிறுகதைத் தொகுப்பு இந்நூல். நாம் பலவிதமான மனிதர்களுடன் பழகுகிறோம். என்றாலும், பிறரின் வாழ்க்கையை நாம் நுட்பமாகக் கவனிப்பது இல்லை. ஆனால் நூலாசிரியர் மிக மிக நுட்பமாகக் கவனித்து, அவற்றின் அடிப்படையில் அற்புதமான சிறுகதைகளை உருவாக்கியிருக்கிறார். அவற்றில் 19 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். செருப்புத் தைப்பவரின் வாழ்க்கையைக் கூறும் செருப்புகளில் சிக்கிய வாழ்க்கை, திருந்தவே மாட்டான் என்று கருதப்பட்ட பிக்பாக்கெட் திருடன் ராசு, செய்யாத குற்றத்தைச் […]

Read more

பிளிறல்

பிளிறல், சுப்ரபாரதி மணியன், கனவு, விலைரூ.100. எட்டு சிறுகதை தொகுப்பு இந்நுால். சில கதைகள், மாத இதழ்களில் வெளிவந்துள்ளன. குறுங்கதைகளும் இடம் பெற்றுள்ளன. பிரச்னைகள், பெண்களின் இயல்பான பண்புகள்,வெறுப்பு, வன்மம், சமகால பிரதிபலிப்பு, விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை தரம் போன்றவற்றை, உளவியல் பார்வையோடு கதைகளில் விவரிக்கிறார் நுால் ஆசிரியர். ‘யானைகளை விரட்ட, தாரைத் தப்பட்டைக்காரர்களை கூப்பிட போயினர்; யாரும் அகப்படவில்லை; பெரிய பெரிய பட்டாசு வெடித்தனர். திருமணம் செய்தோம், விவாகரத்து பெற்றோம்; மீண்டும் ஒரு திருமண நாளில் சந்தித்தபோது, விவாகரத்து வலி தெரிந்தது’ போன்ற […]

Read more

கனவெனும் மாயசமவெளி

கனவெனும் மாயசமவெளி, ஆர்னிகாநாசர், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.180. ஆர்னிகா நாசரின் விண்வெளி சிறுகதைகள் மூன்றாம் தொகுப்பின் பெயர் கனவெனும் மாயசமவெளி. இந்த பெயரில் வரும் சிறுகதை தான் செம த்ரில்லர் கதை. கனவுகளை களவாடும் கார்ப்பரேட் நிறுவனங்களைப் பற்றிய கனவு… கனவுக்குள் கிரைம்… த்ரில்லர்… கில்லர்… நனவிலும் தொடரும் திகில் என பய பிராந்தியம் ஏற்படுத்துகிறது. மின்சார ஈல் மீன்களைப் பற்றிய கதை சற்றும் எதிர்பாராதது. அதன் மரபணுவை மனிதன் எப்படி பயன்படுத்தி ஜெயிக்கிறான் என்பது விறுவிறுப்பான கதை. நுாறாண்டு […]

Read more

காஷ்மீரியன்

காஷ்மீரியன், தேவராஜ் விட்டலன், பிறை பதிப்பகம், விலை: ரூ.110 இரண்டு கவிதைத் தொகுப்புகளைத் தொடர்ந்து வெளியாகியிருக்கும் தேவராஜ் விட்டலனின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘காஷ்மீரியன்’. இந்தியாவின் வெவ்வேறு நிலப்பரப்புகளுக்குப் புலம்பெயரும் பாதுகாப்புத் துறையில் பணியாற்றுகிறார். இந்தப் பணியினூடாகப் பெற்ற அனுபவங்களும், சொந்த நிலத்தின் வேர் அறுந்த துயரங்களும் இந்தத் தொகுப்பில் புனைவுகளாக உருப்பெற்றுள்ளன. நகர வாழ்க்கை மீது தொடர்ந்து உருவாகிக்கொண்டே வரும் மிகை வெளிச்சத்துக்குப் பலியாகும் இடங்களையும், நகரம் தரும் நவீன வாழ்க்கையின் போதாமைகளில் வெளிப்படும் கிராமத்தின் உன்னதங்களையும் இவரது கதைகள் பேசுகின்றன. அடுத்த […]

Read more

ஒரு சாமானியனின் ஒரு பக்க கதைகள்

ஒரு சாமானியனின் ஒரு பக்க கதைகள், கா.ஜோதி, கவிநிலா பதிப்பகம், விலைரூ.130. சிறு சம்பவங்களைக் கொண்டு எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 100 கதைகள் உள்ளன. அன்றாடம் செய்திகளில் அடிபடும் சம்பவங்களை, அறத்துடன் கோர்த்து கதைகளாக்கியுள்ளார். மிகச் சாதாரணமான சம்பவங்கள் கூட கதைகளாகியுள்ளன. எச்சரிக்கும் விதமாகவும், அறிவுறுத்தும் வகையிலும், சேவைகளை மேன்மைப்படுத்தும் விதத்திலும் அமைந்துள்ளன. முன்னுதாரணமாக பல கதைகள் அமைந்து உள்ளன. நன்றி: தினமலர், 3/1/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

பால் டம்ளர்

பால் டம்ளர், ராஜி ரகுநாதன், கனவு, விலைரூ.150. தெலுங்கு மொழி பெண் எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நுால். தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்பில், 21 எழுத்தாளர்கள் எழுதிய கதைகள் இடம் பெற்றுள்ளன. இந்த கதைகள் அனைத்தும் தெலுங்கு மொழி பத்திரிகைகளில் வெளியவந்து புகழ் பெற்றவை. தெலுங்கு மொழி பேசும் பகுதிகளின் தன்மையை பிரதிபலிக்கின்றன. புதுமையான திருப்பங்களைக் கொண்டுள்ளன.மிகவும் எளிய நடையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வாழ்வின் நுட்பங்களை உணர்த்தும் புனைவுகளின் தொகுப்பு நுால். நன்றி: தினமலர், 3/1/21 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030843_/ இந்தப் புத்தகத்தை […]

Read more

உவர்

உவர்,  இரா.சிவசித்து, மணல்வீடு, பக்.152, விலை ரூ.150;  மணல்வீடு, ஓலைச்சுவடி, கனலி ஆகிய இதழ்களில் வெளிவந்த 9 சிறுகதைகளின் தொகுப்பு. தொகுப்பில் உள்ள கதைகளை வாசிக்கும்போது, கிராம மக்களின் வாழ்க்கையை வாழ்ந்த அனுபவம் வாசகருக்குள் நிகழ்கிறது. பாத்திரங்களின் பேச்சு, கதையாசிரியரின் விவரிப்பு, நிகழும் சம்பவங்கள் அனைத்தும் கிராமத்து மண்ணில் வேர்விட்டு வளர்ந்தவை. உவர் சிறுகதையின் நீலமேகம் மாமா போன்ற மனிதர்களை இப்போதும் பார்க்க முடியும். சிறிய, பெரிய விஷயங்களுக்காக மனிதர்களுக்குள் நடைபெறும் அடிதடி சண்டைகள், வசவுகள் கூடவே அவற்றையெல்லாம் மீறி பொங்கி வழியும் அன்பு […]

Read more

உப்புச்சுமை

உப்புச்சுமை,  ஐ.கிருத்திகா,  தேநீர் பதிப்பகம்,  பக்.168, விலை ரூ.160. கடந்த 20 ஆண்டுகளாக எழுதிவரும் நூலாசிரியரின் முதல் சிறுகதைத் தொகுப்பு இந்நூல். நாம் பலவிதமான மனிதர்களுடன் பழகுகிறோம். என்றாலும், பிறரின் வாழ்க்கையை நாம் நுட்பமாகக் கவனிப்பது இல்லை. ஆனால் நூலாசிரியர் மிக மிக நுட்பமாகக் கவனித்து, அவற்றின் அடிப்படையில் அற்புதமான சிறுகதைகளை உருவாக்கியிருக்கிறார். அவற்றில் 19 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். செருப்புத் தைப்பவரின் வாழ்க்கையைக் கூறும் செருப்புகளில் சிக்கிய வாழ்க்கை,  திருந்தவே மாட்டான் என்று கருதப்பட்ட பிக்பாக்கெட் திருடன் ராசு, செய்யாத குற்றத்தைச் செய்ததாக […]

Read more

ஒரு மோகினியின் கதை

ஒரு மோகினியின் கதை, பூவை.எஸ்.ஆறுமுகம், வைகுந்த் பதிப்பகம், விலைரூ.110 பத்து சிறுகதைகளைக் கொண்ட நுால். கதைகள் பெரும்பாலும் பெண்களை மையப்படுத்திச் செல்கின்றன. மரபு வழிக் கதை சொல்வனவாய் அமைந்துள்ளன. சந்தர்ப்பச் சூழ்நிலையில் பெண்கள் படும் அவலம், ஆணாதிக்கம் அவர்களை அடிமைப்படுத்த முயலுதல், பெண்களின் சமயோசிதம் முதலான போக்குகளில் கதை சொல்லப்படுகிறது. ஒரு மோகினியின் கதையில், தாசி அழகால் ஈர்க்கப்பட்டு வாழ்வில் குறுக்கிடும் இளைஞர்கள் பற்றியது. காதல் பொல்லாதது என்ற கதையில், மனைவியை மிகவும் நேசிக்கும் ஒருவன், இள வயது தோழியையும் விரும்புவதை சொல்கிறது. சில […]

Read more

புல்லாங்குழல்

புல்லாங்குழல், ஆர்னிகாநாசர், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.160 ஆசிரியர் ஆர்னிகா நாசரின் விண்வெளி சிறுகதைகள் தொகுப்பின் கடைசி புத்தகம் புல்லாங்குழல். கற்பனைக்கு எட்டாத அதிசயங்களை அழகான கதையாக பிணைத்து உள்ளார். கதைக்கு கதை அறிவியல் வித்தியாசங்களை காட்டி அதிசயிக்கச் செய்யும் ஆசிரியரின் கைவண்ணத்துக்கு ஒரு கோப்பை தேநீர், காகித அம்பு கதைகளே சான்று. முனியம்மா ரயில் வண்டி நிலையம்… இனிமேல் நடக்கப் போகும் கூத்தின் ஆரம்ப கட்ட யதார்த்தம். ஆசிரியரின் கற்பனைக் கதைகளுக்கான அறிவியல் தேடல் மிக அதிகம் என்பதை அவரது […]

Read more
1 2 3 73